காதல் வாயில்..
20 பங்குனி 2021 சனி 16:19 | பார்வைகள் : 13638
நாம் இருவரும்
அருகருகே நின்றும்
உன் விழி வான்பார்ப்பதும்
என் விழி மண் பார்ப்பதுமாய்
மாயங்கள் காட்டி
சொல்லிடமாட்டானா என்று நானும்
இவள் பேசட்டுமே என்று நீயும்
பொய் கோலங்கள் காட்டி
காலங்கள் கடத்துவதை விடுத்தும்...
விழியோடு விழி நோக்கி
மனதின் வேட்கையை
உரைத்திடத் தடையாகும்
நாணமதைக் கொன்றும்...
மடை திறந்த வெள்ளமென
மௌனப் பூட்டுடைந்து
காதல் வாயில் திறந்திடாதோ....!!

























Bons Plans
Annuaire
Scan