காதலியுங்கள் ....
27 பங்குனி 2021 சனி 07:59 | பார்வைகள் : 14275
நானும் காதலிக்கிறேன்
தெரியுமா ...
இந்தக்
காற்றை ....
அந்த
மரத்தை ...
அந்த மரம்
உதிர்க்கும் பூக்களை ...
இந்த
இசையை ....
அந்த
பாடலை .....
அதன் இதமான
வருடலை ....
இந்தப்
பறவையை ...
அந்த
வானத்தை ...
அந்த வானுதிர்க்கும்
மழைத்துளிகளை ...
இந்தக்
குழந்தையை ...
அதன்
சிரிப்பை ...
அது
சொல்லாமல் சொல்லும்
சேதிகளை ...
என்
கனவுகளை ....
அது தரும்
குறையாத
சுகங்களை ...
என் உலக
மனிதர்களை ....
அந்த
உறவுகளை ...
அவர்கள்
விட்டுப் போகும்
சுவடுகளை ....
என்
தோல்விகளை ...
தோல்வி தந்த
அனுபவங்களை ....
அனுபவம் தரும்
வெற்றிகளை ...
நானும்
காதலிக்கிறேன்
தெரியுமா ..
என்னை ...
இந்த
நிமிடங்களை ....
என்
சுதந்தரத்தை ...
என்
தொழிலை ...
என்
வாழ்கையை ..
இந்த நிமிட
என் சொந்தங்களை ...
நீங்களும்
காதலியுங்கள் .....
வாழ்க்கை
பிடிபடும் ...
இன்னும்
வாழும்
ஆசை வரும் ...
நம் வாழ்க்கைக்கு
முற்றுப் புள்ளி
வைக்கிற இயற்கை
மீது கோபம் வரும் ...
நீங்களும்
காதலியுங்கள்
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan