மண்ணில் விழுந்த துளி
22 வைகாசி 2021 சனி 10:09 | பார்வைகள் : 13953
மண்ணில் விழுந்த துளி
தாய் மேகத்தின்
வயிற்றிலிருந்து
கை கோத்து
பிறந்து
வான் எல்லையை
தொட்டவுடன்
தும்புகளும்
தூசுகளும் உடன்
சேர்ந்ததால்
கோபமோ தாபமோ
கோர்த்து வந்த
கைகளை சட சடவென
அனைத்தும் பிரித்து
கொள்ள
ஒற்றை துளிகளாய்
ஓராயிரமாய்
எண்ணிலடங்காமல்
சோவென சப்தமிட்டு
மண்ணில் வந்து
முத்தமிட்டது
ஒவ்வொரு துளியாக
அதுவும் ஒன்றின்
மேல் ஒன்றாக


























Bons Plans
Annuaire
Scan