அழகு தின்னிப் பறவை!

27 ஆனி 2023 செவ்வாய் 06:04 | பார்வைகள் : 10662
விழி இரண்டும் சிறகடித்துப் பறக்கும்!
இரட்டைப் பறவைகளாய்
அழகைக் கண்டதும் பொன்னி வண்டுபோல!
அதில் மொய்க்கும்
ஆடு போல அனைத்தையும் மேயும்!
புறாக்கள் போல
நட்சத்திரங்களைப் பொறுக்கியுண்டு!
நிலா முட்டியில் பாலருந்தித் திரும்பும்
ஆடுபோல் ஓரிடத்தில் குந்தி ஓய்வாய் இரை மீட்டும்!
மீண்டும் இரவு விளக்கின் மங்கிய இருளில்
ஒதுங்கிய மாராப்பில் புகுந்து!
கோழியாய்
எங்கனும் சீச்சிப் பொறுக்கித் தின்று!
களைப்பில் மயங்கி விழும்
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025