Paristamil Navigation Paristamil advert login

மனக்கதவு

 மனக்கதவு

12 பங்குனி 2023 ஞாயிறு 04:20 | பார்வைகள் : 9202


உள்ளுக்குள் பூட்டிய
மனக்கதவினைத் திறக்க
வெளியிலிருந்து
எத்தனையோ சாவிகள்
முயன்று தோற்றுப்
பின்வாங்கின
 
சாவித்துவாரத்தின் வழி
வெளிச்சக் கதிர்
உள் நுழைகிறது
கதவைத் திறந்ததும்
வெளிச்சம் விரவி
முழுதாய் ஆக்கிரமிக்க
 
பின்வாசல் வழி
முக்காடிட்டு
வெளிறி வெளியேறியது
காரிருள்

வர்த்தக‌ விளம்பரங்கள்