பெண்

2 சித்திரை 2023 ஞாயிறு 09:15 | பார்வைகள் : 10285
கண்ணும் கண்ணும்
கதை பேசும் அழகு
பெண்ணும் பெண்ணும்
மொழி பேசும் அழகு
புன்னகை சிந்தும்
பூ மகள்
பொன்னகை சிந்தும்
பொன் மகள்
என
கவிதைகள் வடிப்பதும்
இலக்கியங்கள் அவளுக்கு
இலக்கணம் முடிப்பதும்
எவ்வளவு தூரம்
இனிக்க இனிக்க
இதயம் தொடுகின்றதோ
அவ்வளவு தூரம்
இலக்கியங்கள் விற்கப்படும்
விளம்பரங்கள்
விளைச்சல் எடுக்கும்.