Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள ஆடு!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள ஆடு!

9 ஆடி 2023 ஞாயிறு 12:10 | பார்வைகள் : 10540


இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அந்த குடும்பங்களுக்கு ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது.

ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இவ்வாறு 70,000 ஆடுகள் விநியோகிக்கப்படவுள்ளதாக  அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்கேற்புடன் ரன்ன, வடிகல பிரதேசத்தில் இந்த வேலைத்திட்டம் இன்று(09) ஆரம்பமானது.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று ஆடுகள் வீதம் வழங்கப்படும் நிலையில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட 07 விவசாய தொழில்முனைவோர் கிராமங்களில் தலா 10 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆடுகள் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்