Paristamil Navigation Paristamil advert login

அழகான திருமண உறவிற்கு ஆப்பு வைக்கும் பிரச்சனைகள்!!!

 அழகான திருமண உறவிற்கு ஆப்பு வைக்கும் பிரச்சனைகள்!!!

24 புரட்டாசி 2013 செவ்வாய் 08:30 | பார்வைகள் : 14545


 மனைவி அல்லது கணவன் அமைவது இறைவன் கொடுத்த வரம். அது நன்றாக அமைவது அவரவர் தலையெழுத்தை பொறுத்து அமைகிறது. நாம் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டாலும், அந்த பந்தத்துடன் சேர்ந்து பயணிக்கும் போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனால் அவர்கள் பிரிந்தும் கூட விடுகின்றனர். 

 
இந்த பிரச்சனைகளுக்கு சப்பை காரணங்களும் இருக்கலாம், ஏன் பெரிய பூகம்பமாக கூட இருக்கலாம். நாம் எதிர்பாராமல் இவை அனைத்தும் நடந்துவிடும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் உள்ளதென்றால். அது சில அறிகுறிகள் மூலமாக நமக்கு காட்டிவிடும். பிரச்சனை ஏற்பட்டு, அது முறிந்த பின்னர் தான் அதை தடுத்திருக்கலாமே என்று யோசித்தாக வேண்டுமா? விவாகரத்து என்பது ஒரு திருமணத்தின் சோகமான முடிவாகும்.
 
இந்த விவாகரத்து அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி குழப்பங்களை உண்டு பண்ணும். யாராக இருந்தாலும் அதை விரும்புவதில்லை. ஆகவே பொக்கிஷமான இந்த உறவை அழிக்கும் பிரச்சனைகளான அறிகுறிகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவற்றைப் படித்து, இத்தகைய அறிகுறிகள் உங்களுக்குள் இருந்தால், அதனை நீக்கிவிட்டு, வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.
 
பழைய விஷயத்தைக் கிண்டுவது, பட்டப் பெயர் வைத்து கூப்பிடுவது, வசை பாடுவது, மாமனார் மாமியாரை பற்றி குறை கூறுவது என இவை அனைத்தும் இருவருக்கும் நடக்கும்
 
இருவருமே சண்டை போடுவதற்கு சப்பை காரணங்களை தேர்ந்தெடுப்பார்கள். இதன் விளைவு, ஒருவரை ஒருவர் தவிர்க்க வீட்டிற்கு வர பிடிக்காமல் போகும். சின்ன குறை கூட பெரிய சண்டையாக மாறலாம். இதற்கு தீர்வே இல்லை என்று பல பேர் தவறாக நினைக்கின்றனர்.
 
நீங்கள் சொல்லும் விளக்கத்திற்கு லாஜிக் இருக்காது. நீங்கள் சொல்வது தான் சரி என்ற ஈகோ வந்து விடும்.
 
இனி இருவருக்கும் மத்தியில் ஆரோக்கியமான போட்டி இருக்காது. உங்களுக்கு அனுபவமோ, அறிவோ இல்லாத விஷயத்தில் உங்கள் துணையின் உதவியோ அறிவுரையோ இனி கிடைக்காது. உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இனி அவர் இருக்கமாட்டார்.
 
நீங்கள் ஒத்துக்கப்பட்டு கவனிப்பாரின்றி கிடந்தால், உங்களுக்கு அந்த வீட்டின் உறுப்பினர் என்ற எண்ணம் போய் ஒரு வெளியாள் என்ற எண்ணம் குடியேறிவிடும். அந்த குடும்பத்தின் ஒருவராக உங்களை உங்களால் எண்ணவே முடியாது. இனி அது நம் குடும்பம் அல்ல என்று தோன்றத் தொடங்கும். இது மிகவும் ஆபத்தான எண்ணம்.
 
திருமணத்திற்கு பின் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்வது, குடும்ப வாழ்க்கையை சீரழித்துவிடும். அது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும். மேலும் இது உங்கள் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
 
இருவரில் ஒருவருக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போனால், வாழ்க்கை சந்தோசம் இல்லாமல் போகும். திருமண வாழ்க்கை சுமூகமாக போக செக்ஸ் கூட ஒரு முக்கிய காரணமாகும்.
 
இரண்டு பேரில் ஒருவர் பிரச்சனையை விட்டு தப்பியோடும் குணாதிசயத்தோடு இருந்தால், பிரச்சனை பெரிசாகி தான் போகும். இது கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து, விஸ்வரூபம் எடுத்து தாண்டவமாடி, உங்கள் உறவை உடைத்துவிடும்.
காதல் மொழி அல்லது பூங்கொத்து என்று கூட அவசியம் இல்லை, 'நீ எப்படி இருக்கிறாய்' என்று கேட்காமல் இருந்தால் கூட, பிரச்சனை தொடங்கிவிடும். உங்களுக்கு இடையே அமைதி அதிகரித்து கொண்டே போனால், உங்கள் உறவும் நின்றுவிடும்.
 
 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்