Paristamil Navigation Paristamil advert login

பெண்களின் வாழ்க்கையை சிதைக்கும் ஆண் நட்பு...

பெண்களின் வாழ்க்கையை சிதைக்கும் ஆண் நட்பு...

4 கார்த்திகை 2013 திங்கள் 06:36 | பார்வைகள் : 14949


 பழகும் போதே மொத்தத்தில் ஆண் நண்பர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்து கொண்டு பழகுங்கள். பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில் தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. 

 
பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் தான் பெண்களுக்கு ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகிறார்கள். பள்ளி வயதில் ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்கும் அவர்கள் கல்லூரிக்கு சென்றதும் சுதந்திரமாக ஆண் நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கிறது. 
 
சிலருக்கு பெற்றோரை விட்டு தங்கி படிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும் பழக்கம் ஏற்படுகிறது. 
 
கல்லூரி வட்டத்தை தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது. இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு கிடைக்கிறது. 
 
சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் ஃபிரண்டாக` மாறி விடுகிறான். நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான் என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு அன்பை வளர்க்கிறார்கள். 
 
இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும் போது தான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கிடையே நம்பிக்கை என்ற பெயரில் தொடுதல், ஸ்பரிசம், முத்தங்களும் தொடர்கிறது. கடைசியில் எல்லை மீறி உறவுகளும் நிகழ்ந்து விடுகிறது. 
 
அதற்குப் பிறகு தனது ஆசை நிறைவேறிவிட்ட லட்சியத்தில்(!) பாய் ஃபிரண்ட் வேறு கேள் ஃபிரண்டை தேடிச் செல்கிறான். அப்போதுதான் `நாம் ஏமாந்துவிட்டோம் என்ற எண்ணமே பெண்களுக்கு வருகிறது. எல்லா விஷயங்களையும் தங்களுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்து விடுகிறார்கள் பல பெண்கள். 
 
எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு வேறு ரூபத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள்கிறார்கள். 
 
பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை. மனைவி இயல்பாகவே தன் பாய் ஃபிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது. 
 
இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய் ஃபிரண்ட் பற்றிய பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேக அம்பை வீசி விடுகிறான் கணவன். 
 
இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்