Paristamil Navigation Paristamil advert login

காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்

காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்

11 கார்த்திகை 2013 திங்கள் 10:10 | பார்வைகள் : 15077


 இப்போதுள்ள ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். முதல் பெண்னை காதலித்து அவள் அழகை, அறிவை புகழ்ந்துவிட்டு திருமணமும் செய்து கொள்வதாக கூறுவார்கள். 

 
பின்னர் அதைவிட சிறந்ததாக அவர்கள் கருதும் மற்றொரு பெண் வந்ததும், முதலில் காதலித்த பெண்னை விட்டுவிடுவார்கள். அடுத்தடுத்து ஆண்கள் வாழ்க்கையில் பல பெண்களை சந்திப்பார்கள். இன்னொரு சிறந்த பெண்ணை பார்த்தால் இரண்டாவதாக காதலித்த பெண்னையும் விட்டு விட்டு, அந்த பெண்ணை காதலிப்பார். 
 
இப்படி நல்லது தேடி பெண் விட்டு பெண் பாயும் ஆண்களின் வாழ்க்கையில் சிக்கிக்கொள்ளாமல் பெண்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். . ஆண்களே முதலில் உங்கள் மனதை பக்குவப்படுத்துங்கள். பின்பு உருப்படியான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து மனைவியாக்குங்கள். 
 
அவர் மேலும், சிறந்ததாக வேண்டும் என்று நினைத்தால், அன்போடு அந்த தகுதிகளையும் அவரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்- அல்லது தேர்ந்தெடுத்த பெண்ணிடம் இருக்கும் நல்ல குணங்களை பாராட்டி, அவரோடு சிறப்பாக வாழுங்கள். 
 
எல்லா குணங்களும், எல்லா சிறப்புகளும் கொண்ட பெண் உலகில் யாரும் இல்லை. இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு சிறப்பான பெண்களை தேட எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை, சிறப்பான ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது. 
 
நீங்கள் இப்போது சிறப்பாக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்னை விட்டுவிட்டு மற்றொரு பெண்னை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் நாளையே உங்களைவிட சிறப்பான ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை என்னவாகும் நினைத்துப்பாருங்கள்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்