கணிதப் பிரிவில் சித்தியடைந்த மாணவன் மரணம்
8 புரட்டாசி 2023 வெள்ளி 14:08 | பார்வைகள் : 13692
கல்விப் பொதுத் தராதர உயர்தர கணிதப் பிரிவில் அதிகூடிய சித்தியடைந்த குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் ஒருவர், பெறுபேறுகள் கிடைத்த இரண்டு நாட்களில் இதய நோயினால் திடீரென உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோராய ரணவன பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய ஆர்.ஜி.மனுஜய ஹன்ஸ்மல் என்பவரே இந்த அகால மரணத்திற்கு இலக்காகியுள்ளார்.
வீட்டில் வியாழக்கிழமை (7) இரவு உறங்கிக் கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞன் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் இரண்டாவது தடவையாக தோற்றியிருந்ததோடு, அண்மையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளின்படி அவர் மூன்று B சித்திகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.
உயர்தரத்திற்கு தோற்றிய போதுஇ மக்கள் வங்கியின் குருநாகல் மல்லவப்பிட்டிய கிளையில் தற்காலிகமாக பணியாற்றினார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan