Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

விவாகரத்தான பெற்றோர்கள் செய்யும் தவறுகள்!!!

விவாகரத்தான பெற்றோர்கள் செய்யும்  தவறுகள்!!!

27 வைகாசி 2013 திங்கள் 16:22 | பார்வைகள் : 18675


 முறிவு என்பது கடினமான ஒன்று. விவாகரத்து அடைந்த பெற்றோர்களின் பிள்ளைகள், பெற்றோர்களை விட அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோரின் உறவு முறிவால் பாதிப்பு அடைந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தங்கள் வேலையை பார்த்து வருகின்றன்ர். மற்ற குழந்தைகள் திடீரென நிகழும் மாற்றத்தால், தங்கள் அன்றாட வேளைகளான இரவு உணவிற்கும், வீட்டு பாடங்களை முடிப்பதற்கும் பெற்றோரை நாடி வருகின்றனர்.

 
பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் பிரிவால் ஏற்படும் வடுவை, அவர்கள் பெரியவர்கள் ஆகும் வரையும் தாங்கி செல்கின்றனர். ஆனால் பிரிய முனைவதற்கு முன்னர் பெற்றோர்கள் விவாகரத்து செய்வதற்கு முன்பு அதை சரி செய்ய முனைய வேண்டும். விகாரத்து செய்து கொள்ளும் பெற்றோர்கள் செய்யும் ஐந்து முக்கிய தவறுகள் இங்கு உள்ளன. 
 
குழந்தையை தூதர் ஆக்க வேண்டாம் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மூலம் ஒருவருக்கொருவர் உரையாடுவதால், பெற்றோர்களின் நிலையை கண்டு குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உங்களது முன்னாள் வாழ்க்கைத் துணையுடன் உரையாட மின்னஞ்சல் சிறப்பாக உதவுகின்றது. இதன் மூலம் உரையாடுவதால் பழைய காயங்களை கிளராமல், எதை பகிர வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதை மட்டும் பகிர்ந்து தேவையற்ற குழப்பத்தை உருவாக்காமல், குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி முடிவெடுக்கலாம். மின்னஞ்சல் மூலம் உரையாடல் என்பது பதிவு செய்யப்பட்ட உரையாடலாகவும் இருக்கலாம் என்பதால், இதனை நீதிமன்றம் போன்ற இடங்களில் சாட்சியாக ஏற்றுக் கொள்ள வாய்ப்பிருப்பதால் உரையாடும் போது, பெற்றோர் வழக்கத்தை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
 
குழந்தையை சிகிச்சை நிபுணராக்க வேண்டாம் விவாகரத்தால், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, உங்களின் இளவயது பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்வதால், அவர்கள் ஆறுதலாக இருக்க முடியும் என்று நினைக்காதீர்கள். ஏனெனில் இயல்பாகவே எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றீர்கள் என்பதை அறியவும், உங்களுக்கு உதவவும் மிக ஆர்வமாக இருப்பார்கள், ஆனால் இந்த விஷயத்தில் அவர்களின் பெற்றோராகவே இருந்து, அவர்களிடமிருந்து எந்த ஆறுதலையும் எதிர் பார்க்காதீர்கள். பிள்ளைகளுடன் முன்னாள் துணைவரைப் பற்றிய, உங்களின் கோப உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள். பழைய வாழ்க்கையின் கோபத் தாபங்களை அவர்கள் முன் காட்டவும் வேண்டாம். உங்களுக்கான ஆறுதலை வெளியே தேடுங்கள். தேவைப்பட்டால் மன அமைதிக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடியுங்கள். மேலும் உங்கள் மனதின் பாரத்தை, பிள்ளைகளை சுமக்க வைப்பதென்பது தவறான செயலாகும். அது அவர்களை மிகவும் பாதித்து விடும். 
 
குழந்தைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் பெற்றோர்களின் விவாகரத்திற்கு பின் குழந்தைகளின் உணர்வுகள் கொந்தளிப்பான நிலையில் இருக்கும். எனவே, அவர்களின் நிலையை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அவர்கள் உணரும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். என்ன நினைக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லாதீர்கள். இது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், உங்கள் முன்னாள் வாழ்க்கைத் துணையை விமர்சித்து அவர்களிடம் பேசாதீர்கள். ஏனெனில் பிள்ளைகள் 50 சதவிகிதம் வாழ்க்கை துணைவரின் பாதி என்பதால், வாழ்க்கைத் துணையை விமர்சிப்பது உங்கள் பிள்ளைகளை விமர்சிப்பது போன்றதாகும். அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை கூர்ந்து கவனியுங்கள். பெற்றோராக அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டாக வேண்டுமென்றில்லை, அவர்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தால் போதும். அவர்களைப் பற்றிய உங்களின் புரிதலும் அக்கறையுமே, அவர்களின் காயத்திற்கு சிறந்த மருந்து. 
 
விசாரணையைத் தவிர்த்துவிடுங்கள் ஒன்றும் பேசாமல் இருப்பதும், உங்கள் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். மேலும் குழந்தையை உணர்வுப் பூர்வமாக சிந்திக்க வைத்து, மன உளைச்சலுக்கு ஆளாக்காமல், அவர்களிடம் மகிழ்ச்சியாக பேசி அவர்களின் மன உளைச்சலை போக்க வேண்டும். ஆகவே அவர்களிடம் வேடிக்கையாக பேசியும், பொதுவான விஷயங்களைப் பற்றியும் பேசி அவர்களை மகிழ்ச்சி படுத்துங்கள். 
 
செய்த தவறை சரிசெய்யுங்கள் இந்த குறிப்புகளை படிக்கும் போது, விவாகரத்தான பல பெர்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தெரியாமல் செய்த தவறுகளை நினைத்துப் பார்ப்பார்கள். சரிசெய்யும் காலம் கடந்து விட்டதா? என்று யோசித்தால் நிச்சயமாக, உங்கள் பிள்ளைகள் மன்னிப்பார்கள். ஏனெனில் அவர்களது பருவ வயதை அடையும் வரை, அவர்களுக்கு மன்னிக்கும் மனப்பான்மை இருக்கும். மேலும் பருவ வயதிற்கு முன்னர் தான், அவர்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியும். நீங்கள் தவறு செய்திருந்தால் கீழே கொடுக்கப்படும் திருத்தங்களை முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். மன்னிப்பு கேட்பது உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் வெகு நாட்கள் பயணிக்க உதவும். மேலும் செய்த தவறை விரிவாக எடுத்துச் சொல்லி, இனிமேல் அது தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 
 
குறிப்பாக பிள்ளைகளிடம் ஒரு பாதுகாப்பான சைகையைப் பற்றி கூறுங்கள். எடுத்துக்காட்டாக, குழந்தைகளிடம் முன்னாள் வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லி பேசும் பொழுது, அது அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அவர்களின் கையை உயர்த்தும் படி சொல்லுங்கள். அது, நீங்கள் அப்படி பேசுவதை நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதற்கான எச்சரிக்கை மணியாக இருக்கும். மேலும் இந்த வழக்கம் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்வதிலிருந்து உங்களை காப்பாற்றும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்