Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கணவர் மனைவி இடையே சண்டை வர முக்கிய காரணமாக இருப்பது கணவர் .....

கணவர் மனைவி இடையே சண்டை வர முக்கிய  காரணமாக இருப்பது கணவர் .....

29 வைகாசி 2013 புதன் 09:53 | பார்வைகள் : 18679


 கணவர் மனைவி இடையே சண்டை வர முக்கிய காரணமாக இருப்பது கணவர் செய்யும் சில விஷயங்கள் தான். கணவர் செய்யும் சில விஷயங்கள் மனைவியை எரிச்சலடைய செய்யும். 

 
இந்த விஷயங்களை தவிர்த்து விட்டால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வராமல் இருக்கும். கணவரிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயகள் என்னவென்று பார்க்கலாம்.... 
 
• குளித்தால், கை,கால், முகம் கழுவினால் ஈரம் சொட்ட, சொட்ட வந்து வீட்டையே ஈரமாக்குவது. மொசைக் தரையாக இருந்தால் அடுத்தவர்கள் வழுக்கி விழுந்துவிடுவார்களே என்ற கவலை எல்லாம் கிடையாது. அப்படி வழுக்கி விழுந்து காலை ஒடித்துக் கொண்ட மனைவிகளும் உண்டு. 
 
• புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் புகைபிடிப்பது. அதிலும் ரயில் என்ஜின் மாதிரி வீட்டுக்குள்ளேயே புகைவிடுவது மனைவிகளை எரிச்சலின் உச்சத்திற்கே கொண்டு செல்லும். 
 
• காலையில் எழுந்தால் போர்வையை மடித்து வைக்கும் பழக்கமே இல்லை. நான் ஏன் மடிக்க வேண்டும் அதான் சம்பளம் இல்லாத வேலைக்காரி (மனைவி) இருக்கிறாளே என்ற நினைப்பு. 
 
• உடை மாற்றினால் அதை சோபாவிலோ, தரையிலோ, கட்டில் மேலோ அல்லது துவைத்த துணிகளுக்குடனோ போட்டுவிட்டுச் செல்வது. 
 
• முன்னறிவிப்பு இல்லாமல், நேரம் காலமில்லாமல் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது. கணவனுக்கு இது பிடிக்குமே என்று ஆசையாக சமைத்தால் உடனே நண்பர்களை சாப்பிட வரச் சொல்வது. 
 
• எங்கம்மா எவ்வளவு நல்லா சமைப்பாங்க தெரியுமா, என் அக்கா எப்படி பம்பரமா வேலை பார்ப்பா தெரியுமா என்று மனைவியை மட்டம் தட்டி அவரது குடும்பத்தாரின் புராணம் பாடுவது . 
 
• வெளியே அழைத்துச் செல்வேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அதை மறந்துவிடுவது. அல்லது காலதாமதமாக அலுவலகத்திலிருந்து வருவது. 
 
• ஏதாவது ஆசைப்பட்டு கேட்டால் அது உடல்நலத்திற்கு கேடு என்று கூறி வாங்கித் தர மறுப்பது. 
 
• அலுவலகப் பிரச்சனைகளால் மண்டகாஞ்சுபோய் வீட்டுக்கு வந்து அந்த கோபத்தில் மனைவியை திட்டுவது.

வர்த்தக‌ விளம்பரங்கள்