Paristamil Navigation Paristamil advert login

சுமூகமான திருமண வாழ்விற்கு வழிகள்

சுமூகமான திருமண வாழ்விற்கு வழிகள்

7 ஆவணி 2013 புதன் 11:12 | பார்வைகள் : 15174


 திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண், அங்குள்ள கணவரின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரையும் ஏற்றுக் கொண்டு அன்பு, மரியாதை செலுத்த வேண்டும். வெவ்வேறு இடங்களில் இருந்த ஆணும், பெண்ணும் இணையும்போது பல்வேறு விஷயங்களில் முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். 

 
அதை சரி செய்து ஒத்துப் போவது நல்லது. வாழ்க்கை என்றால் நிறைய நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் சகஜமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுடைய துணைவரிடம் நல்ல குணங்கள் இருக்கும்போது அதை கண்டுகொள்ளாமல், குறைபாடுகளை மட்டும் பெரிதாக்குவதை தவிர்க்க வேண்டும். 
 
இருவரது குறைபாடுகளையும் பரஸ்பரம் ஏற்றுக் கொண்டு அதற்கு நல்லதோர் தீர்வு காணலாம். வரவுக்கேற்றபடி செலவு செய்ய இருவரும் முன்வர வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவும். மாதந்தோறும் பட்ஜெட் தயார் செய்து தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. 
 
பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாக பெரியவர்களும் முக்கிய காரணம். சுதந்திரமாக இருக்கும் இன்றைய தலைமுறையை… பெரியவர்கள் சிலர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்படுத்த நினைப்பதை தவிர்க்க வேண்டும். 
 
பெற்றோர் மற்றும் உறவினர்கள் குதர்க்கமான பேச்சு மூலம் தம்பதிகளுக்குள் பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது. சந்தேகம், முன் கோபம், மது அருந்துதல் போன்றவை பிரச்சினை என்ற தீயில் மேலும் எண்ணையை ஊற்றுவது போல் ஆகிவிடும். இதற்கு கவுன்சிலிங் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. 
 
எந்த செயலாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி, அதை செயல்படுத்தினால் பிரச்சினை ஏற்படாது. அதேமாதிரி, எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அனைவரும் அமர்ந்து பேசினால் பிரச்சினையை சமாளிக்க முடியும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது காட்டும் விசேஷ அக்கறை, தம்பதிகளுக்குள் ஒரு நல்ல இணக்கமான சூழ்நிலையை எற்படுத்தும். 
 
முக்கியமாக… குடும்பத்தில் தம்பதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் அதை இருவருமாக பேசி முடிக்க வேண்டும். அதைவிடுத்து மூன்றாவது மனிதரை இந்த விஷயத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம். அதேபோல், திருமணத்திற்கு பிறகு மனைவியை கவனிக்கும் பொறுப்பை பெற்றோரிடம் ஒப்படைப்பதும் தவறு. 
 
இதனால் பிரச்சினைகள்தான் தோன்றும். தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதை கனிவான அணுகுமுறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். இந்த நேரங்களில் பொறுமையான மனநிலையும் முக்கியம். 

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்