உப்பையும் கசப்பையும் இனிப்பாக்க வல்ல உன்னதமான உறவு

16 ஆவணி 2013 வெள்ளி 07:18 | பார்வைகள் : 15719
ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் ,ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு .ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும்,கசப்பையும்,இனிப்பாக்க வல்லது இந்த உறவு.
புது புது உறவுகளை உருவாக்க கூடியது இன்றைய காலகட்டத்தில் நமது அறியாமையால், நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்கின்ற பொருளாதார சிக்கல்களினால், ஆளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளால், தனது ஆதிக்கமே நடைபெற வேண்டுமென்ற தன்முனைப்பால் உண்மையான உறவுகள் பல உடைந்து போகின்றது .
ஒருவரின் பெருமையை ஒருவர் உணராத சிறுமையால் இன்று பரவலாக பல இல்லங்களில் கணவன் மனைவி உறவு தன் புனிதத்தை இழந்து புழுதியாகிவிட்டது,இந்த உறவின் வீழ்ச்சியால் தான் உருவாகிறது,சமூகத்தின் அத்தனை வீழ்ச்சிகளும் .உடல்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு உள்ளங்களை பகிர்ந்து கொள்ளாததே இந்த வீழ்ச்சிக்கு முழுக்காரணம்.
எந்த வீட்டில் ஒரு பெண்ணை அடக்கி ஆண் வெற்றி பெறுகிறானோ ,அங்கே வெல்வது ஒரு மிருகம்,எந்த வீட்டில் ஆணை அடக்கி பெண் ஜெயிக்கிறாலோ அங்கே ஒரு பிடரி ஜெயித்ததாக பொருள். தலை தாழ்ந்த பெண்ணும் தலை உயர்த்திய ஆணும் உள்ள இல்லத்தில் இருமனம் இணைந்து அன்பாலும், நம்பிகையாலும் இன்ப துன்பங்களை இணைத்து பகிர்கிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1