Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பெண்களை புத்திசாலிகளாக்கும் ???உச்சகட்டம்???

பெண்களை புத்திசாலிகளாக்கும் ???உச்சகட்டம்???

12 கார்த்திகை 2014 புதன் 14:22 | பார்வைகள் : 14533


 தாம்பத்ய உறவில் உச்சக்கட்ட நிலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு உணர்வு. தாம்பத்ய சுகத்தின் இந்த கிளைமேக்ஸ் மூலம் உடலின் ரத்த ஒட்டம் சீரடைகிறதாம். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் குணமடைந்து உற்சாகம் அதிகரிக்குமாம்.

 
ரத்த ஓட்டம் சீராகும்
 
செக்ஸ் உறவின் கிளைமேக்ஸில் பெண்களுக்கு பீறிட்டுக் கிளம்பும் உணர்வுகளால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் சீராகப் பாய்கிறதாம். பிறப்பு உறுப்புகளில் மட்டுமல்லாது சருமத்தின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராவதோடு ஆரோக்கியான சருமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றார் ஜெனிபர் பெர்மன் என்ற பாலியல் நிபுணர்.
 
குணமடையும் இதயநோய்கள்
 
உச்சக்கட்ட உணர்வில் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் வேகமாக பாயும். அப்பொழுது சுரக்கும் ஹார்மோன் இதயம் தொடர்பான நோய்களை போக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சியின் மூலம் ஏற்படும் நன்மைகளை விட ஆர்கஸம் மூலம் இதயத்திற்கு நன்மைகள் பல ஏற்படுகிறது.
 
உற்சாகம் அதிகரிக்கும்
 
எண்டோர்பின், டோபமைன், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் ஆர்கஸத்தின் போது உடலில் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் கோகெயின் எனப்படும் போதை மருந்துக்கு ஒப்பானது என்றும் அதை உட்கொள்வதால் ஏற்படும் பறத்தல் போன்ற உணர்வு ஆர்கஸம் மூலம் ஏற்படும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
 
நிம்மதியான உறக்கம்
 
உறவில் ஏற்படும் உச்சகட்ட நிலைக்குப் பிறகு உடலும் உள்ளமும் அமைதியடைந்து நிம்மதியான உறக்கம் வரும். தூக்க குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்த 1,800 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உறவில் ஈடுபட்ட பின் நிம்மதியாக உறங்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.
 
மூளையின் ஆரோக்கியம்
 
ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் விரைவாக பாய்வதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது இது நிரூபிக்கப்பட்டது. ஆர்கஸத்திற்குப் பின்னர் மூளை சுறுசுறுப்பாக செயல்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இயற்கை வலி நிவாரணி
 
உடல்வலியோ மன வலியோ இரண்டையும் போக்கும் இயற்கை வலி நிவாரணியாக செக்ஸ் இருக்கிறது. ஆர்கஸம் மூலம் ரத்த ஓட்டம் வேகமாக பாயும் பொழுது உடலில் ஆங்காங்கே ரத்தம் தேங்கியிருந்தாலும் அவற்றை உடைத்துக் கொண்டு நன்மை செய்கிறதாம். ஆர்கஸத்தின் போது வெளிப்படும் ஹார்மோன்கள் சோர்வு, மன அழுத்தம் போன்றவைகள் ஏற்பட்டிருந்தாலும், தலைவலி இருந்தாலும் அவற்றை போக்கும் மருந்தாக செயல்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்