Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தாம்பத்தியம் சொல்லித் தரும் வித்தியாசமான விஷயங்கள்!!!

தாம்பத்தியம் சொல்லித் தரும் வித்தியாசமான விஷயங்கள்!!!

18 கார்த்திகை 2014 செவ்வாய் 09:46 | பார்வைகள் : 14351


 ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கையில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். 

 
காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் உடலுறவு நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். அதில் நீங்கள் தெரிந்து கொள்ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத்திருப்பதுடன் உடல் கூறுகளுக்கு நன்றாகச் செயல்பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது. 
 
சில ஜோடிகள் படுக்கையில் தங்களுடைய செயல்திறனை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமான விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். காதல் உறவு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
 
உங்களுடைய முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்குத் அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடுபடும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.
 
உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவில் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணைவரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணைப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.
 
உடலில் அல்லது மனதில் உள்ள அழுத்தத்தை அல்லது நெருக்கடியைக் குறைக்க உறவு கொள்ளுதல் ஒரு சிறந்த வழி என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஆனால் இது உண்மையாகவே மன மற்றும் உடல் ரீதியான நெருக்கடிகளைக் குறைக்கக் கூடியது.
 
நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளையும், கசப்பான உணவுகளையும் சாப்பிட்டு முயற்சி செய்பவரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர்களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.  
 
இது உங்களை, குறிப்பாக பெண்களில், காதல் கொள்ளவும் உறவிற்காக ஏங்கவும் செய்யும். இது ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையென்றால் இதனால் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.  
 
உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சியை விட விரைவாக எடையைக் குறைக்க வல்லது.
 
ஆணுறையில்லாமல் உறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்