Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஆண்களிடம் பெண்கள் விரும்பும் பாதுகாப்பு உணர்வு...

ஆண்களிடம் பெண்கள் விரும்பும் பாதுகாப்பு உணர்வு...

11 மாசி 2015 புதன் 10:09 | பார்வைகள் : 15052


 பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும அறிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்களின் வாடிக்கை. 

 
பெண்கள் விரும்புவது பாதுகாப்பு உணர்வைதான், தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக இருந்தாலும் தனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல தோள் சாயும்போது தோழனாகவும், மடி சாயும்போது தாயுமானவனாகவும் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பெண்களின் மனதில் இடமுண்டு. 
 
பெண்களை சந்திக்கும்போது தோற்றத்தில் கவனம்தேவை. முதன் முதலில் உங்களைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்குவது அந்த தோற்றம்தான். பெண்களின் மனதைக் கவர ஸ்மார்ட் லுக் அவசியம் என்கின்றனர் அனுபவசாலிகள். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. 
 
அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களைவிட உங்கள் பணத்தின்மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். 
 
ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி. எப்பொழுதாவது பேசுவதைவிட அடிக்கடி விசாரியுங்கள். தனிப்பட்ட முறையிலோ, குடும்பரீதியாகவோ பேச்சு இருக்கட்டும். அடிக்கடி அவர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். 
 
பெண்களுக்கு உணர்வு ரீதியான செயல்பாடுகள் பிடிக்கும். அதை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஆண்களுக்கு பெண்களின் மனதில் எப்போதும் இட முண்டு. எதையும் வெளிப்படையாக பேசுங்கள். மனதில் கல்மிஷம் இல்லாத பேச்சும், கண்களுக்கு நேராக அதை தெரிவிக்கும் ஆண்களைதான் பெண்களும் அதிகம் பிடிக்கும்..
 
எப்பொழுதும் ஜென்டில்மேன் செயல்பாடுகளுடன் நடந்து கொள்ளும் ஆண்களால் தான் எளிதில் பெண்களின் இதயத்தை கவரமுடியும். பெண்களைக்கவருவதற்காக எத்தனை யோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. 
 
உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும். பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். இது போன்ற செயல்பாடுகளால் மட்டுமே பெண்களின் மனதை கவர முடியும்.  
 

வர்த்தக‌ விளம்பரங்கள்