Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஆண்களை விரைவில் நம்பக்கூடாது என்பதற்கான 7 காரணங்கள்!

ஆண்களை  விரைவில் நம்பக்கூடாது என்பதற்கான  7 காரணங்கள்!

25 சித்திரை 2014 வெள்ளி 15:25 | பார்வைகள் : 16361


 உண்மையான அன்பைத் தேடாத மனிதர்கள் யாரும் இல்லை, அதுவும் இளம் வயதினர் ஒவ்வொருவருக்கும் இதுதான் முதல் தேவையாக இருக்கும். அதே நேரம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த அன்பைப் பற்றிய அபிப்பிராயம் ஒன்று போல இருப்பதில்லை. ஆண்கள் கண்களைக் கொண்டும், பெண்கள் காதுகளையும் கொண்டு அன்பைப் பெறுகிறார்கள் என்பது மிகவும் அறிந்த உண்மை. 

 
எனவே தான், நம்முடைய ஆண்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு மிகவும் முக்கியமானது மற்றும் நாம் அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். நம்பிக்கையுடன் இருந்தால், பெண்கள் எளிதில் காதல் வயப்படுவார்கள். அதனால் அவ்வளவாக அன்பில்லாத ஆண்களிடம் தங்களுடைய மனதைப் கொடுத்து விடுவார்கள்.
 
எனவே தான், ஒரு புதிய உறவை ஏற்படுத்தும் போது புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம். அந்நேரங்களில் உணர்ச்சிகளும், சந்தர்ப்பங்களும் உங்கள் மனதை ஆட்கொள்ள எக்காரணம் கொண்டும் இடம் கொடுக்க வேண்டாம். இல்லாவிடில் ஏமாற்றமும், வெறுப்பும் தான் உங்களுக்கு இறுதியாகக் கிடைக்கும். நீங்கள் ஏன் உங்களுடைய மனதை சாதாரணமாக தரக்கூடாது என்று இங்கே தரப்பட்டிருக்கும் காரணங்கள் விளக்கும். இதன் மூலம் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் பெரிய தவறுகளும் தவிர்க்கப்படுகின்றன.

நீங்கள் காயப்படுவீர்கள் 
 
பொதுவாகவே பார்க்க நன்றாக இருக்கக் கூடிய ஆண்களுடன் நாம் பழகி, மனதைப் பறிகொடுத்து பின்னர் மனமுடைந்து விடுவதால், தனிமையில் உழலுகிறோம். எனவே, ஒரு இளைஞன் உங்களிடம் உண்மையாகவே அன்பு கொள்ளாமல் இருப்பதை உணர்ந்தால், அவருடன் நீங்கள் தொடர்பில் இருக்க வேண்டாம். ஏனெனில், அந்த உறவு கண்டிப்பாக மகிழ்ச்சியில் முடியப் போவதில்லை. பெரும்பாலான பெண்கள் காலப்போக்கில் உண்மையான உணர்வுகள் வரும் என்று நம்புகிறார்கள் மற்றும் அந்நேரத்தில் சூழல் மாறிவிடும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால், நீங்கள் தனியாக இருந்து சோர்ந்து போய்விட்டீர்கள் என்ற காரணத்திற்காக எந்தவிதமான காதலையும் விரும்பி ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஒரு நல்ல மனிதரை நீங்கள் சந்தித்து, அவரை உங்களுக்குப் பிடித்திருந்தால், ஒரு துணைவராக இருக்கத் தேவையான உங்களுக்குப் பிடித்த தகுதிகள் அவரிடம் உள்ளனவா என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். 
 

மோகம் கொண்டவர்கள் ஆண்கள் 
 
ஆண்கள் மோகம் கொண்டவர்கள் என்பது ஒரு வெளிப்படையான இரகசியம். எனவே நாம் இதைக் கொண்டு எதையும் செய்வதற்கில்லை. இந்த உண்மையின் காரணமாக நாம் எதையும் உடனடியாக நம்பக்கூடாது. உண்மையில், எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் முதலில் முகம் மற்றும் உடலின் மேல் தங்களுடைய கவனத்தை செலுத்தி விட்டு, பின்னர் தான் நமது ஆன்மாவின் மேல் காதல் கொள்ள விழைகிறார்கள். உறுதியான மற்றும் நீண்ட கால உறவை நீங்கள் விரும்பினால் உடல் ரீதியான கவர்ச்சிக்கு அங்கு இடம் இருக்கக்கூடாது. எனவே, உங்களுடைய இதயத்தைக் கொடுக்கும் முன்னர் சற்றே பொறுத்திருந்து விட்டு, பின்னர் அன்பைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.
 
உண்மையான தேவையை முடிவு செய்யுங்கள் 
 
ஒரு ஆண்மகனின் துணையை நீங்கள் தேடும் போது உங்களுடைய மனதில் உள்ள, மிகச்சரியான மற்றும் உன்னத மனிதரின் உருவத்தை வரைந்து கொள்ளுங்கள். உங்களுடைய ஆண் நண்பரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் குணங்கள் உள்ளதா என்று பார்ப்பதன் மூலம் உங்களுடைய திட்டங்கள் மற்றும் கனவுகளை உண்மையாக்க முடியும். பெண்களில் பலரும் தங்களுடைய முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொண்டு விடுவதால், இந்த முடிவில்லாத நிலை தவறான மனிதரைத் தேர்ந்தெடுப்பதில் முடிவடைகிறது. நீங்கள் ஏன் காதலில் விழுந்து ஒருவரை எளிதில் நம்பக்கூடாது என்பதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. இதற்காக ஒரு குறிக்கோளை அமைப்பதையும் மற்றும் உங்களுடைய துணைவரிடம் எதிர்பார்த்த மதிப்பு மிக்க குணங்கள் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவருடன் ஒருநாள் டேட்டிங் செல்லும் அதிர்ஷ்டம் உங்களுக்கு இருந்தால், அதற்குப் பின்னர் உங்களுடைய முயற்சியில் முக்கியமான கட்டத்திற்குச் செல்லலாம்.

வெற்றிடத்தை நிரப்பும் நேரம் இதுவல்ல! 
 
உங்களுயை முன்னாள் காதலரிடமிருந்து நீங்கள் சமீபத்தில் தான் பிரிந்திருக்கலாம் அல்லது வாழ்க்கையில் உங்களுக்கு வேறு ஏதேனும் தொல்லைகள் இருக்கலாம். இதுப்போன்ற சமயங்களில், புதிதாகக் கிடைக்கும் காதல் மிகவும் பெரிய விஷயமாக இல்லையென்றாலும் உங்களுடைய சோகத்தை துரத்தவும் மற்றும் இதயத்தின் வெற்றிடத்தை நிரப்பவும், அது ஒரு மருந்தாக இருக்கும். போதுமான அளவிற்கு அவர் உங்களிடம் கவனம் செலுத்தவில்லை என்றாலும் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் அன்பை அவர் வெளிப்படுத்தவில்லை என்றாலும், நீங்கள் எதிர்பார்க்கும் நபர் அவர் இல்லை என்பது தெளிவு. எனவே அந்த நபரை நீங்கள் விரும்ப வேண்டாம். உங்களுக்கு இப்பொழுது தேவைப்படும் அரவணைப்பும், அன்பும் தான் நீங்கள் அவருடன் இருக்க ஒரே காரணமாகும்.
 
முதலில் அடித்தளத்தை உருவாக்குங்கள் 
 
உங்களுடைய உறவை மகிழ்ச்சியாகவும் மற்றும் வெற்றிகரமாகவும் வைத்திருக்க வலிமையான அடித்தளம் ஒன்று இருக்க வேண்டும். ஒரு நல்ல வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் கூட, உறுதியான அஸ்திவாரம் அமைய வேண்டியது அவசியம் என்னும் போது, அன்பு சார்ந்த உறவில் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. எந்தவொரு காதலர்களாக இருந்தாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகும் முன்னர் செல்ல வேண்டிய சில படிநிலைகள் உள்ளன. சிறிய பேச்சுக்களில் தொடங்கி, அவரை நம்பத் தொடங்கும் வரையிலும் மற்றும் உங்களுக்கும் அவருக்கும் எண்ணற்ற பொதுவான விஷயங்கள் இருக்கும். உறவுமுறையில் இந்த படிநிலையை நீங்கள் வெற்றிகரமாகத் தாண்டி விட்டால், உங்களுடைய இதயத்தை அவருக்கு கொடுத்து, அவரில் ஒரு பாதியாக இருக்க நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்று பொருள்.
 
கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் 
 
உங்களுடைய வாழ்வில் சரியான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாகவும், சரியாகவும் எடுக்க வேண்டும். ஆண்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த குணங்களை எப்பொழுதும் கவனித்திருங்கள் மற்றும் அதைப் பெற்றுள்ள மனிதருக்காக காத்திருங்கள். இந்த தேவைகளை கொண்டிருக்காத மனிதரைப் பார்த்து உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களுக்கு ஏற்ற துணைவர் யார் என்று இன்னமும் உணராமல் இருந்தால், யாரோ ஒருவரின் அன்பு மற்றும் கவனத்திற்காக உங்களுடைய மனதை கொடுத்துள்ளீர்கள் என்று அர்த்தமாகும். அழகான மற்றும் கவர்ச்சியான ஒரு ஆணை நீங்கள் சந்திப்பது மட்டுமே, அவரிடம் காதல் வயப்பட ஏற்ற காரணம் கிடையாது. அழகான முகத்தை விட, அவருடைய தனித்தன்மையான குணங்களே அதிக முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். நீங்களும் அழகான மற்றும் இளமையான பெண்ணாக இருப்பதால், வரும் காலத்தில் ஆர்வமூட்டக் கூடிய நபர்களை சந்திக்க நேரிடும். விரைவில் அல்லது சற்று தாமதமாக உங்களுக்குத தேவையான விஷயத்தைப் பெற்று, உங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து, கனவுகளை பின்பற்றலாம்.
 
அவர் எதையோ மறைக்கிறார் 
 
பெரும்பாலான ஆண்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பதில்லை என்பதும், அவர்கள் நம்முடன் டேட்டிங் வரும் போது நிறைய விஷயங்களை மறைக்கிறார்கள் என்பதும் தான் நமது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும். எனவே தான் வாழ்நாள் முழுவதும் பழக வேண்டிய மனிதரைத் தேர்ந்தெடுப்பதில் நாம் அவசரம் காட்டக்கூடாது என்பதற்கு மிகவும் ஏற்ற காரணமாக இது உள்ளது. உங்களுடைய இறுதி முடிவை பாதிக்குமளவிற்கு சக்தி வாய்ந்த விஷயமாக காலம் உள்ளது. உங்களுடைய ஆண் நண்பரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வைப்பது காலம் தான். எனவே, அவரை முழுவதும் புரிந்து கொள்ள ஏற்ற கருவியாக அது உள்ளது. அதற்கேற்றார் போல, ஒரு மனிதனின் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் முழுவதும் தெரிந்திருந்தாலும், அவரிடம் உங்களுடைய மனதைத் திறக்க நேரும் போராட்டம் மற்றும் ஏமாற்றத்தை தவிர்க்க முயற்சி செய்யவும்.
 
ஒரு புதிய உறவு தொடங்கும் போது நாம் பெரும் மகிழ்ச்சியையும் மற்றும் நேர்மறையான உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறோம். அழகான மற்றும் நல்ல மனிதராகத் தோன்றும் ஒருவரிடம், அவருடைய நல்ல மற்றும் கெட்ட குணங்களை தெரிந்து கொள்ளும் முன் நீங்கள் வேகமாக காதல் வயப்பட்டு விடுவீர்கள். இது போன்ற கவனக்குறைவான முடிவுகள் எதிர்பார்க்காத விளைவுகளை ஏற்படுத்தவும், உங்களுடைய மனம் உடைந்து போகவும் செய்யும். இவ்வாறு நிகழாமல் இருக்க வேண்டுமானால், எப்பொழுதும் சூழலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் மற்றும் பொறுமையுடன் இருக்கவும் வேண்டும். உங்களுக்குத் தேவையான சிறந்த மனிதரைத் தவிர, வேறு யாரிடமும் உங்களுடைய இதயத்தை கொடுக்க வேண்டாம். எனவே, இது போன்ற மகிழ்ச்சியற்ற உறவுகளை ஏற்படுத்தாமல் தவிர்க்க நீங்கள் எப்படிப்பட்ட சரியான வழியை பின்பற்றப் போகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்