முதல் பார்வையில் ஆண்கள் பெண்களிடம் கவனிக்கும் விஷயங்கள்!!!
28 வைகாசி 2014 புதன் 10:06 | பார்வைகள் : 17258
பெண்களுக்கு எப்போதுமே தங்களின் தோற்றத்தின் மீது தனி அக்கறை இருக்கும். தங்களை ஆண்கள் கவனிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆண்கள் மத்தியில் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்த எதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பெண்களுக்கு பெரிய குழப்பமே ஏற்படும். பொதுவாகவே ஆண்களை கூர்ந்து கவனித்தால் அவர்கள் தெளிமையானவர்கள் என்பது புரியும். அதனால் அவர்கள் பெண்களிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம். உடல் ரீதியான அழகையும். அம்சங்களையும் தான் பெண்களிடம் ஆண்கள் விரும்புகின்றனர் என பல பெண்களும் நினைக்கின்றனர். ஆனால் அனைத்து ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. வெறும் உடல் ரீதியான அழகை மட்டும் பார்த்து சில ஆண்கள் மயங்குவதில்லை. இங்கு முதல் பார்வையில் பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாமா...!
வசியப்படுத்தும் கண்கள்
பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் முதன்மையான விஷயம் அவர்களின் கண்களாகும். ஒருவரை கண்ணால் தான் காண்கிறோம். அதனால் கண்களே முதன் முதலில் தென்படும் முதன்மையான அம்சமாக விளங்குகிறது. ஒரு ஆளை பற்றி அவரது கண்கள் முழுமையாக கூறி விடுமாம். அதனால் ஒரு பெண்ணின் கண்களை பார்த்து அவரது பெர்சனாலிடி மற்றும் இயல்பை கண்டறியலாம்.
புன்னகை
ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விஷயமாக அமைவது புன்னகையாகும். சிரித்த முகத்துடன் இருப்பவரோடு இருக்க யாருக்குத் தான் பிடிக்காது? புன்னகை சுலபமாக ஆண்களை வசியப்படுத்தும். அதனால் அது ஒரு பெண்ணிடம் அவர்களை சுலபமாக ஈர்த்து விடும். இதுவே பெண்களிடம் இரண்டாவதாக கவனிக்க கூடிய அம்சமாகும். நம்புங்கள், உங்கள் புன்னகையால் ஒரு ஆணை உங்கள் மீது காதலில் விழ வைக்க முடியும்.
கூந்தல்
கூந்தல் மீது அதிக அக்கறை கொள்ளும் பெண்களும் அதனை நன்றாக பராமரிக்கும் பெண்களும் கண்டிப்பாக புத்திசாலியாகவே இருப்பார்கள். காரணம், ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தலை கொண்டு ஆண்களை மயக்க முடியும் என்ற ரகசியத்தை அவர்கள் அறிவார்கள். அழகிய, பளபளப்புடன், நறுமணம் வீசும் கூந்தலை உடைய பெண்களுடன் இருக்க ஆண்கள் விரும்புகிறார்கள் என ஆய்வுகள் கூறுகிறது.
கால்கள்
பெண்களின் கால்களை பார்த்து ஆண்கள் மயங்குவார்கள் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. பொதுவாக நீண்ட கால்களை உடைய பெண்கள் மீது ஆண்களுக்கு கூடுதல் ஈர்ப்பு ஏற்படுவதுண்டு என்று ஆய்வுகள் கூறுகிறது. இது போக சரியான அளவிலான கால்கள் (பொடியாகவும் அல்லாமல் தடியாகவும் அல்லாமல்) என்றால் ஆண்களை வேகமாக ஈர்க்குமாம். அதனால் பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் அம்சங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.
மார்புகள்
பல பெண்களும், ஏன் ஆண்களும் சரி, பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் முதன்மையான அம்சமாக விளங்குவது மார்பகங்களே என நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். ஆண்கள் மார்பகங்களை கவனிப்பார்கள்; ஆனால் கண்கள் மற்றும் புன்னகைக்கு பிறகு. மார்பகங்கள் என்பது வளமையை குறிக்கும். கட்டுப்படுத்த முயன்றாலும் கூட ஆண்களால் பெண்களின் மார்பகங்களை கவனிக்காமல் இருக்க முடிவதில்லை. காரணம் அது அவர்களின் இயற்கை குணமாகும். அதனை தன் உணர்ச்சியாலேயே அவன் கட்டுப்படுத்துகிறான்.
ஆடை அணிவிப்பு
மேற்கூறிய அனைத்து அம்சங்களுக்கு பிறகு வருவதே ஆடை அணியும் விதம். இதை வைத்தே ஆடை அணியும் விதத்திற்கான முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அதனால் நீங்கள் அணியும் ஆடை அவ்வளவாக முக்கியம் இல்லை. மேற்கூறிய அனைத்து அம்சங்களை கவனித்த பின்னரே அவர்கள் உங்கள் ஆடைகளை கவனிப்பார்கள். அதனால் மேற்கூறிய அனைத்தின் மீதும் கவனம் செலுத்திய பின்னர், உங்கள் உடையின் மீது கவனம் செலுத்தினாலே போதும். ஆண்களை ஈர்க்க நீங்கள் ஆடை அணியும் விதம் ஸ்டைலாக இருக்க வேண்டும். அதனால் அன்றைய காலத்திற்கு ஏற்ப ஃபேஷனில் ஆடைகளை அணியுங்கள். ஃபேஷன் புத்தகங்களான எல், வோக் போன்றவைகளை படித்து தற்போதைய ஃபேஷனை விரல் நுனியில் வைத்திடுங்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan