Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஆண்களிடம் பெண்கள் கேட்கும் சில தந்திரமான கேள்விகள்!!!

ஆண்களிடம் பெண்கள் கேட்கும் சில தந்திரமான கேள்விகள்!!!

29 ஆனி 2014 ஞாயிறு 12:39 | பார்வைகள் : 16651


மனிதர்களின் மனம் மர்மமாகவே செயல்பட்டு வருகிறது. அதுவும் உங்கள் காதலி/மனைவி உங்களிடம் ‘இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள்’, என்று வெறுமையான கேள்வியுடன் வரும் பொழுது ஆபத்து நெருங்கி வருகிறது என்பதை உடனடியாக உணரத் துவங்குவீர்கள். உங்களுடைய நண்பர்களுடன் குடித்த பீர் பற்றிய கேள்வியாக அது இருந்தால், நீங்கள் ஒரு கதையை உடனடியாக சொல்லத் துவங்குவீர்கள்.
 
ஏனெனில், நமது மனம் விளைவுகளாலும், வீசுகின்ற கேள்விகளாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அவள் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தை சொல்லுவதாக நினைப்போம். இது போன்ற கேள்விகளின் போது, நீங்கள் சுமூகமாக அவற்றைக் கடந்து செல்லும் வழிகளையும், அது போன்று பெண்கள் கேட்கும் தந்திரமான கேள்விகளைப் பற்றியுமே இந்த கட்டுரை விளக்கம் தர முயல்கிறது.
 
நீ என்னை விரும்புகிறாயா? அவள் ஏன் கேட்கிறாள்? – ஒரு பெண்ணுடைய உடலானது, நீங்கள் அவளிடம் செலுத்திக் கொண்டிருக்கும் அன்பை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வதால், அதை கேட்டுத் தெரிந்து கொள்ளும் பொருட்டாகவே இந்த கேள்வியை அவள் கேட்கிறாள். இது தன்னுடைய உறவின் பாதுகாப்புத் தன்மையை அவள் பரிசோதிக்கும் வழிமுறையாகும். உங்களுடைய பதில் – அவளுடைய உடலமைப்பு மற்றும் காட்சியைப் பற்றி புகழ்ந்து பேசி, மேலும் சலனப்படுத்தாமல், அவளிடம் என்றென்றும் மாறாதிருக்கும் குணங்களைப் பற்றி பேசுங்கள். அதில் அவள் மிகச்சிறந்தவள், மிகச்சிறந்த நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனம் கொண்டவள் மற்றும் அவள் ஒரு அருமையான துணைவி என்று சொல்லுங்கள்.
 
நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவள் ஏன் கேட்கிறாள்? – ஏனெனில், ஒரு பெண்ணானவள் திறந்த வகையிலான கேள்விகளைக் கேட்க மிகவும் விரும்புவாள். மேலும், தான் விரும்பும் வகையில் ஆண்மகன் பேச வேண்டும் என்ற எண்ணத்துடன் பெண்கள் கேள்விகளை உருவாக்குவார்கள். உங்களுடைய பதில் – நீங்கள் எந்தவித பதட்டமும் மற்றும் தடையும் இல்லாமல் அவளுடன் பேசத் தொடங்குங்கள். அவளுடைய கேள்வியை நேரடியான கேள்வியாக மாற்றி வடிவமைக்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், அவளுடைய மனதை அரித்துக் கொண்டிருக்கும் சில விஷயங்களை சாந்தப்படுத்தி விட முடியும்.
 
மிகவும் அழகான வைரம் இருக்க வேண்டிய இடம் இது தானே? அவள் ஏன் கேட்கிறாள்? – இந்த கேள்வி வைரம் இருக்கும் இடத்தைப் பற்றியதல்ல. பரிசுகள் உங்களுடைய அன்பை அவளுக்கு காட்டலாம். ஆனால், உங்களால் வாங்க முடியாத, விலைமதிப்பு மிக்க நகையை கேட்பதாக நீங்கள் நினைத்திருப்பீர்கள். உங்களுடைய பதில் – அந்த நகையை அவள் அணியும் போது அழகாக இருப்பாள் என்று சொல்லுங்கள். மேலும், உங்களிடம் பணம் இருக்கும் நாளில் அதை வாங்கிக் கொடுப்பதாகவும் சொல்லுங்கள். உங்களுடைய பதில்களின் வாயிலாக அவளுடைய உணர்வுப்பூர்வமான இச்சைகளை அரவணைத்துக் கொள்வதன் மூலம், இருவருமே திருப்தியடைய முடியும்.
 
என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவள் ஏன் கேட்கிறாள்? – அவள் எதைப்பற்றியோ உங்களிடம் பேச விரும்புகிறாள். உங்களுடைய பதில் – இந்த கேள்வி திடீரென்று சோதனை செய்வது போல வந்தாலும், பதில் சொல்வது எளிதான விஷயம் அல்ல. அவளை மேற்கொண்டு பேசச் செய்யுங்கள். அவளுக்கு என்ன பிரச்சனை, அவள் எதை நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று ‘மென்மையாக’ கேளுங்கள்.
 
நாம் எப்போது குழந்தை பெற்றுக் கொள்வது? அவள் ஏன் கேட்கிறாள்? – பொதுவாகவே பெண்கள் ஆண்களை விட உறுதியளிக்க முன் வருவார்கள். மேலும், ஆண்களிடமும் இனிமையாகப் பேசி அதையே செய்யத் தூண்டுவார்கள். உங்களுடைய பதில் – நீங்கள் வேறெந்த பெண்ணிடமும் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சொல்லுங்கள். ஆனால் உங்களுக்கு வாழ்க்கையை அனுபவிக்க மேலும் சில நாட்கள் வேண்டும் என்று சொல்லுங்கள். நேரடியாக முடியாது என்று சொல்வதற்குப் பதிலாக, உங்களுடைய பதிலை காதல் மற்றும் காரணத்தைக் கொண்டு வடிவமையுங்கள்.
 
என்னுடைய புதிய உடை உங்களுக்குப் பிடித்துள்ளதா? அவள் ஏன் கேட்கிறாள்? – கடந்த சில நாட்களாக அவளை நீங்கள் புகழ்ந்து பேசியிருக்க மாட்டீர்கள் என்பது பெரும்பாலான விஷயங்களில் உண்மையாக இருக்கும். எனவே, உங்களுடைய கவனத்தை ஈர்க்கும் பொருட்டாக இந்த கேள்வியைக் கேட்கிறாள். உங்களுடைய பதில் – அவள் எதிர்பார்த்ததை விட சிறந்த பதிலைக் கொடுத்து அவளை ஆச்சரியப்படுத்துங்கள். அந்த உடையின் வண்ணத்தைப் பற்றியும், அதன் மூலம் அவளுடைய கண்களுக்கு அழகு கூடுவதைப் பற்றியும் பேசுங்கள். அந்த உடை அவளை அங்கங்கே ‘சிக்’கென்று பிடித்திருப்பதாக சொல்வதில் எந்தவித தயக்கமும் காட்ட வேண்டாம். இது போன்ற பாஸிட்டிவ் ஆனா விஷயங்களைப் பற்றி அவளிடம் அடிக்கடி சொல்லி வந்தாலே போதும், அவளிடமிருந்து உறுதி செய்வதற்கான கேள்விகள் மீண்டும் மீண்டும் முளைக்காது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்