பெண்களுக்கு மறுமணம் வாழ்வு அளிக்குமா?

16 ஆடி 2014 புதன் 12:50 | பார்வைகள் : 13511
இந்தப் பிரிவில் வருபவர்களும் பாவப்பட்ட ஜீவன்கள்தான். இவர்கள் பஸ்சை தவற விட்டவர்கள் இல்லை. பஸ்சில் இருந்து வெளியே தள்ளி விடப்பட்டவர்கள். மணமுறிவு ஏற்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கணவனோ, மனைவியோ அல்லது இரண்டு பேரின் செயல்பாடுகளும் விவகாரத்துக்கு காரணமாக அமையலாம்.
மணமுறிவு பெற்றவர்கள் என்றதுமே அவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தாலும், தங்களது ஏதோ ஒரு வக்கிர புத்தியினால் வாழ்க்கையை பாழாக்கி கொண்டவர்கள் என்ற எண்ணமே நம் சமூகத்தில் நிலவுகிறது. அதிலும் ஆணுக்கு இதில் அவ்வளவாக பிரச்சனையில்லை. பெண்ணுக்குத்தான் பெரிதும் பிரச்சனை.
நாம் மனதளவில் இன்னும் மணமுறிவை ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தை அடையவில்லை என்பதையே இது காட்டுகிறது. உற்றார் உறவினர்கள், நண்பர்களும் கூட மணமுறிவு பெற்றவர்களை வினோதமாக பார்க்கும் நிலை இன்னும் நீடிக்கிறது. இதனால், மணமுறிவு பெற்றவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கும் குற்ற உணர்வுக்கும் ஆளாகின்றனர்.
சமூகத்தில் தாங்கள் மட்டும் தனித்து விடப்பட்டது போன்ற ஒரு உணர்வு இவர்களை எப்போதும் சூழ்ந்து சோகத்தில் ஆழ்த்துகிறது. அத்துடன் குடும்பத்தினரை விட்டு தனித்து வாழ்கின்ற நிலையும் ஏற்படுகின்ற போது, இவர்களது மன தைரியம் சிதறுண்டு நொறுங்கிப் போய் விடுகிறது.
தனிமையும், சுயஇரக்கமும், மனச்சோர்வும் இவர்களது மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன. மண வாழ்விற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமானால் அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள இவர்கள் ஆவலோடும் ஆயத்தமாகவும் இருக்கின்றனர்.
இந்த எண்ணத்தை செயல்படுத்த இவர்கள் வேறொரு மணமுறிவு பெற்ற துணையை தேடிக் கொள்ளலாம். இத்தகைய திருமணங்கள் வெற்றிப் பெற்றுள்ளன. இதற்கு காரணம் வேறு வேறு சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்வதாக இருக்கலாம்.
வசதியின்மை காரணமாக தங்கள் வசந்த காலத்தை தவற விட்ட பெண்களும், ஆண்களும் தங்கள் வயதின் காரணமாக மணமுறிவு பெற்றவர்களை மணக்க முன்வரலாம். அதுபோன்ற நேரத்தில் மணமுறிவு பெற்றவர்கள் தங்களது புதிய துணைவி அல்லது துணைவரை அன்புடனும் பாசத்துடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்துடனும் அணுக வேண்டும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025