Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உங்காளு பண்புள்ள ஆண்மகனா இதைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம்!!!

உங்காளு  பண்புள்ள ஆண்மகனா இதைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம்!!!

26 புரட்டாசி 2014 வெள்ளி 07:28 | பார்வைகள் : 15601


 இக்காலத்தில் நல்ல பண்புள்ளவரை சந்திப்பதே கஷ்டம். அதிலும் நல்ல பண்புள்ள காதலன்/காதலியை பார்ப்பது என்பது பெரிய அதிசயம். ஒருவேளை அப்படி சந்தித்தால் அவர்களை உங்கள் வாழ்க்கையில் எப்போதும் இழந்துவிட வேண்டாம்.

 
சரி, நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? நீங்கள் காதலிக்கும் ஆண் நல்ல பண்புள்ளவரா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் இங்கு நீங்கள் காதலிக்கும் ஆண் பண்புள்ளவர் என்பதை வெளிப்படுத்தும் சில குணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
நல்ல பண்புள்ள ஆணை காதலிக்கும் போது நாம் அவரை நினைத்து அதிகம் பெருமைக் கொள்வோம். ஏனெனில் அவர் நமது வாழ்க்கை துணையாக வந்தால், அவர் நம்மை நல்ல மரியாதையுடனும், நல்ல பாதுகாப்பு இருக்குமாறு உணரச் செய்வதுடன், எக்காலத்திலும் நம்மை விட்டு செல்லாமல், சந்தோஷத்தை மட்டும் அள்ளி வழங்குவார்.
 
நல்ல பண்புள்ள ஆண்மகன் தன் துணைக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும் என்பதை புரிந்து அவர்களை அடிக்கடி நச்சரிக்காமல், போதிய இடைவெளி விட்டு, துணையை மரியாதையுடன் நடத்துவார்கள். மேலும் மற்றவர் முன்னிலையில் உங்களை அவமரியாதையுடன் நடத்தமாட்டார்கள்.
 
பண்புள்ள ஆண்மகன் எப்போதும் தன் காதலி/மனைவியிடம் கெட்ட வார்த்தையை அவர்கள் இருக்கும் போதோ அல்லது அவர்களிடமோ உபயோகிக்கமாட்டான்.
 
உங்கள் காதலன் ஜென்டின் மேன் என்றால், அவர்கள் உங்களை கையில் வைத்து தாங்குவார்கள். நீங்கள் கஷ்டப்படுவதை ஒரு போதும் பார்க்க விரும்பமாட்டார்கள். உதாரணமாக, சிறு பொருளை நீங்கள் தூக்குவதாக இருந்தாலும், உங்களை செய்யவிடாமல் அதனை அவர்களே செய்வார்கள்.
 
நல்ல பண்புள்ள ஆண் பொது இடத்தில் தன் காதலியை தொடக்கூட விரும்பமாட்டான். மேலும் தன் காதலியை எப்போதும் வற்புறுத்தி அவர்களுடன் சந்தோஷமாக இருக்கவும் விரும்பமாட்டான்.
 
உங்கள் காதலன் உங்களுக்கு முதன்முதலாக கன்னத்திலோ அல்லது நெற்றியிலோ கொடுத்தால், அவன் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளான் என்று அர்த்தம். மேலும் எந்த ஒரு பண்புள்ள ஆணும் தன் காதலிக்கு முதலில் உதட்டில் கொடுக்கமாட்டான்.
 
முக்கியமாக நல்ல பண்புள்ள ஆண் தன் காதலியை ராணி போன்று பார்த்துக் கொள்வான். உங்கள் காதலன் உங்களுக்கு அவ்வப்போது பரிசுகள் மற்றும் ஆச்சரியங்களை வழங்கினால், உண்மையிலேயே அவர்களை மிஸ் பண்ண வேண்டாம். ஏனெனில் அவர்களை விட யாராலும் உங்களை நன்கு சந்தோஷமாக பார்த்துக் கொள்ள முடியாது.
 
நல்ல பண்புள்ள ஆண் தன்னை நம்பி வந்த எந்த ஒரு பெண்ணையும் தவிக்கவிட மாட்டான். மேலும் தன் காதலிக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவான்.
 
நல்ல பண்புள்ள ஆண் தன் துணை எப்போதும் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதனால் தன் துணை எங்கு சென்றாலும், அவர்களை பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு தான் அவர்களே வீட்டிற்கு செல்வார்கள்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்