Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

திருமணத்திற்கு பின்பும் காதலிக்கலாம்...

திருமணத்திற்கு பின்பும் காதலிக்கலாம்...

19 புரட்டாசி 2016 திங்கள் 12:14 | பார்வைகள் : 12117


 * மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது கணவரின் கடமைகளில் முதன்மையானது. எனவே மனைவி கூறுவதை செவி கொடுத்து கேட்பதை விட இதயப்பூர்வமாக கேளுங்கள். ஏனெனில் அதைத்தான் உங்கள் மனைவி அதிகம் எதிர்பார்க்கிறார்.

 
* தம்பதியரிடையே எதிர்மறையான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதற்குமே இல்லை என்று சொல்வதற்கு முன், இருமுறை சிந்தியுங்கள். ஏனெனில், நீங்கள் ஆம்..! என்று கூறுவதனால் உறவு பலப்படுகிறது, என்பதை அறிந்து நீங்களே ஆச்சரியமடைவீர்கள்.
 
* குடும்பத்திற்காக பணம் செலவழிப்பது என்பது அவசியமானதுதான். ஆனால் அதுவே அத்தியாவசியமாகிவிடாது. பணத்தை விட அவர்களோடு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமானது. ஏனெனில் பணத்தை விட மனைவிக்காகவும், குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்ற நேரமே அதிகம் நன்மை தரக்கூடியது.
 
* கணவன்-மனைவியே தொடர்பற்று இருப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள். எந்த சூழ்நிலையிலும், கணவன்-மனைவி இடையே பேச்சு வார்த்தை குறைந்து விடக்கூடாது. மாறாக அவர்களோடு உங்களது பிள்ளைகள், காலநிலை, வீட்டு விவகாரம் செலவினங்கள் பற்றி பேசுங்கள். பேச்சு தொடர்பு குறைகின்ற போது மணவாழ்க்கை சிக்கலில் முடி வடையும்.
 
* தவறு செய்யாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை. மனைவி தவறு செய்தால் அவற்றை குத்திக்காட்டி பேசுவதை விட, பிழை களைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும். ஏனெனில் மன்னித்தல் என்பது தெய்வ குணத்திற்கு ஒப்பானது. தம்பதியரிடையே மன்னிக்கும் அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.
 
* வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற பிரச்சினையில் தான் அதிகமான குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட சுமையல்ல. மனைவியானவர் அதை எதிர்ப்பார்க்காவிட்டாலும் நீங்கள் அறிந்து உதவ வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதையே சில தம்பதியர் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.
 
காதல் திருமணம் என்றாலும் சரி, பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் என்றாலும் சரி... சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட தற்போது நீதிமன்ற வாசலையே தேடி செல்கின்றனர். மனதிற்கு பிடித்தவரை சேர்ந்து வாழ்வோம், இல்லாதபட்சத்தில் சந்தோஷமாக பிரிந்து விடுவோம் என்ற மனநிலை இன்றைக்கு சாதாரணமாகிவிட்டது.
 
உயிருக்கு உயிரான தம்பதியராக இருந்துவிட்டு, திடீரென பிரிவது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஆனால் இதை உணராமல், விவாகரத்தையே தீர்வாக நினைக்கிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்