பெண்களை என்றும் இளமையாக வைத்திருக்கும் தாம்பத்தியம்
19 ஐப்பசி 2016 புதன் 10:09 | பார்வைகள் : 11494
உடல் ரீதியான நெருக்கத்தை வளர்த்தல் மற்றும் தம்பதிகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துதல் எனும் போது, உடலுறவில் பல பயன்கள் உள்ளது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு அதிக பயன்கள் அடங்கியுள்ளன.
வாரத்திற்கு 4 தடவைக்கு மேல் உடலுறவில் ஈடுபடுபவர்கள் தங்கள் உண்மையான வயதை விட 10 மடங்கு இளமையாக தோன்றுவார்கள் என 10 ஆண்டு கால ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆக்சிடாஸின் போன்ற அழற்சி எதிர்ப்பி மூலக்கூறுகள் உள்ளதால், உடலுறவில் ஈடுபடுவது நன்மையை அளிக்கிறது.
“உடலுறவு கொள்ளும் போது, ஆக்சிடாஸின் மற்றும் பீட்டா எண்டோர்பின்கள் போன்ற அழற்சி எதிர்ப்பி மூலக்கூறுகளில் உங்கள் சருமம் குளிக்கும். நமக்கு வயது ஏறும் போது, நமக்கு பழுது ஏற்படும் அளவிற்கு குணமாகும் தன்மை இருப்பதில்லை. ஆனால் உடலுறவு கொள்வதால் இந்த பிரச்சனை நீங்கும்.
சீரான முறையில் உடலுறவில் ஈடுபட்டால், நோய்வாய் படும் வாய்ப்புகள் குறையும். அதிகமாக உடலுறவு கொள்ளாதவர்களை விட, அதிகமாக உடலுறவு கொள்பவர்களுக்கு ஆன்டிஜென் இம்யூனோக்ளோபின் ஏ 30% அதிகமாக இருக்கும் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. சளி மற்றும் காய்ச்சலில் இருந்து ஆன்டிஜென் உங்கள் உடலை பாதுகாக்கும். இதனை உங்கள் உணவிலும் சேர்த்துக் கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கலாம்.
உடல் எடையை குறைக்கும் சந்தோஷமான வழிகளில் தாம்பத்தியமும் ஒன்று. உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு நிமிடத்திலும், ஆண்கள் 4.2 கலோரிகளையும், பெண்கள் 3.1 கலோரிகளையும் எரிக்கின்றனர்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan