Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பெண்களுக்கு கழுத்தில் தாலி ஏறியவுடன் ஏற்படும் பயம்

பெண்களுக்கு கழுத்தில் தாலி ஏறியவுடன் ஏற்படும்  பயம்

16 மாசி 2015 திங்கள் 07:01 | பார்வைகள் : 16366


 நம் வாழ்க்கையை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு திருமணத்திற்கும் உள்ளது. திருமணம் என்றாலே ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக பெண்களில் வாழ்க்கையில், சந்தோஷம், பதற்றம், படபடப்பு, குதூகலம், கொண்டாட்டம் என பல உணர்வுகளை அள்ளிக் கொடுப்பது தான் திருமணம்.  

 
பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வரும். புதிதாக திருமணமான ஒரு பெண்ணின் மனதில் பல எண்ணங்கள் ஓடும். நீங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணா? அப்படியானால் திருமணம் முடிந்த கையோடு உங்கள் மனதில் எழும் பல விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாம். 
 
• நீங்கள் உங்கள் வீட்டில் காலையில் லேட்டாக எழுந்து கொள்பவராக இருக்கலாம். காலையில் தாமதமாக எழுந்து உங்கள் மாமனார் மாமியாரிடம் கண்டிப்பாக கெட்ட பெயரை வாங்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதனால் நீங்கள் தான் கடைசியாக எழுந்துள்ளீர்கள் என்ற எண்ணமே உங்களை சில நிமிடங்களுக்கு நடுங்க வைத்து விடும்.
 
• புகுந்த வீட்டில் எந்த மாதிரி ஆடை அணிவது என்ற எண்ணம் உங்களிடம் நிலவும். ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு ஆடையை எடுக்கும் போதும் ஏதாவது கேள்விகள் கண்டிப்பாக உங்கள் மனதில் எழும். உதாரணத்திற்கு, 'புதிதாக திருமணம் ஆனதால் இதை அணிவது சரியாக இருக்குமா?', 'நான் ரொம்ப காஷுவலான ஆடைகளை தேர்ந்தெடுக்கிறேனா?' போன்ற கேள்விகள். 
 
• முதல் நாள் மாமனார் மாமியாரிடம் நல்ல பெயரை எடுக்க வேண்டும்.  அவர்களுக்கு என்னை பிடிக்க வேண்டும். நான் சமைத்த உணவுகள் அவர்களுக்கு பிடிக்க வேண்டும்.". இப்படியெல்லாம் உங்கள் எண்ணத்தில் ஓடும் தானே! 
 
• மாமியார் நம்மிடம் எவ்வாறு நடந்து கொள்வார். மகளாக நினைப்பாரா? அல்லது மருமகளாக நினைப்பாரா. மாமியாருக்கு பிடித்தபடி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனைகள் கழுத்தில் தாலி ஏறிய உடனேவே வரத்தொடங்கிவிடும். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்