Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உடலுறவில் ஆண்கள் செய்யும் தவறுகள் ...!

உடலுறவில் ஆண்கள் செய்யும் தவறுகள் ...!

23 மாசி 2015 திங்கள் 12:40 | பார்வைகள் : 16286


 அந்த விஷயத்தில் கொடிக்கட்டிப் பறப்பவர்கள். ஆண்கள் உடலுறவில் மூழ்கித் திளைத்து முத்தெடுக்க நினைப்பவர்கள். அந்த முயற்சியின் போது, அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் பெண்களை வெறுப்படைய செய்கிறதாம். என்னதான் வெறுப்பு வந்தாலும், கணவன் என பெண்கள் பொறுத்துப் போகின்றனர் என கூறப்படுகிறது.

 
அந்த தவறுகளை தொடர்ந்து செய்து வந்தால், ஆண்கள் பின் நாட்களில் நிறைய சங்கடங்களை அனுபவிக்க நேரிடும் என வல்லுனர்கள் மீண்டும் கூறுகின்றனர். சரி, அப்படி என்ன சின்ன சின்ன தவறுகளால் பிரச்சனை ஏற்படுகிறது என தெரிந்துக் கொள்ள, தொடர்ந்து படியுங்கள்...
 
 
ஆண்கள் பிறவியிலேயே அந்த விஷயத்தில் சீக்கிரம் உச்சம் கொள்ளும் பண்புடையவர்கள். ஆனால், பெண்கள் அப்படியில்லை, அவர்கள் உச்சமடைய ஆண்கள் தான் உதவ வேண்டும். அதை தவிர்த்து தன் வேலையை மட்டும் பார்த்து கொண்டு சுகம் அனுபவிக்க ஆண்கள் முயல்வது முதல் தவறு.
 
ஏதோ பத்தாம் வகுப்பு தேர்வு அறையில் நுழைந்தது போல அமைதியாக வேலைகளை செய்வது, பெண்களுக்கு பிடிப்பதில்லை. பெரும்பாலான பெண்கள் ஆண்களின் வார்த்தை விளையாட்டில் தான் உச்சம் அடைகின்றனர். எனவே கட்டிலில் ஆண்கள் இந்த தவறை செய்யவேக் கூடாது.
 
சில ஆண்களுக்கு கடிக்கும் பழக்கம் இருக்கும். உடலுறவில் இது ஒருவகையான விளையாட்டு தான் என்றாலும். பெண்களின் மென்மையான பாகங்களை ஆண்கள் சில சமயம் வலுவாக கடிப்பதனால், பெண்கள் மிகவும் வேதனை அடைகின்றனர். எனவே, நாய் வேலை செய்வதை ஆண்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.
 
ஆண்கள் பல சமயங்களில் ஆங்கில படத்தை பார்த்துவிட்டு, இந்திய பெண்களிடம் அவர்கள் செய்வதைப் போல செய்ய தூண்டுவது தவறு என்கின்றனர். அனைத்து பெண்களுமே அனைத்தும் அறிந்தவராக இருக்கமாட்டார்கள். ஆண்கள் தான் மெல்ல மெல்ல புரிய வைத்து அனுபவிக்க வேண்டும். அதை தவிர்த்து பெண்களைக் கட்டாயப்படுத்துதல் தவறு.
 
 
அந்தரங்கத்தில் ஆண்கள் தங்கள் இன்பம் முடிந்த பின்பு, அவர்களது துணையும் முழு திருப்தி அடைந்தாரா என தெரிந்துக் கொள்வதில்லை, சில அந்தரங்க இடங்களில் முத்தமிடும் போது பெண்கள் முழுத்திருப்தி அடையும் வரை முத்தமிடுவது அவசியம். ஆண்களுக்கு தாகம் தீர்ந்துவிட்டது என அவர்களது தாகம் தீரும் முன்னர் எழுந்துவிடுவது தவறு.
 
பெண்களுக்கு எப்போதுமே தனக்கு தெரியாது என ஒப்புக் கொள்ளும் மனப்பான்மை கிடையாது. எனவே, எதற்க்கெடுத்தாலும் அந்த விஷயங்களில், உனக்கு இது தெரியுமா, அது தெரியுமா என கேள்விகள் கேட்காது, நீங்களாகவே அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இங்கு நீங்கள் ஆசானாக செயல்படவேண்டியது கட்டாயம்.
 
பல ஆண்களுக்கு காரியம் முடிந்தவுடன் உறக்கம் வந்துவிடும். ஆனால், பெண்களோ காரியம் முடிந்த பின்னர் தான் அதிகம் சுகம் தேடுவர். ஆண்கள் காரியம் முடிந்த பின்னர் பெண்களிடம் நிறைய பேச வேண்டும், அவர்களின் ஆசை தணியும் வரை பேச வேண்டும். காதல் வார்த்தைகளை அவர்களது காதின் நுனியில் தேனருவியாக பாய்ச்ச வேண்டும்.
 
இந்திய ஆண்கள் பொதுவாகவே சாப்பாட்டிலேயே முழு கவனமாக இருப்பார்கள் சைடு-டிஷ்ஷை மறந்துவிடுவார்கள். இதே தவறை பல ஆண்கள் இரவிலும் செய்கின்றனர். அது தவறு, வேலை முடிந்த பிறகு தான் பெண்கள் நிறைய எதிர்பார்ப்பார்கள். முக்கியமாக ஆசையான முத்தங்கள். இதை பெரும்பாலான ஆண்கள் நிறைவேற்றுவதில்லை என பெண்கள் கூறுகின்றனர்
 
தினந்தோறும் ஒரே உணவை சமைத்தால் பெண்களை திட்டும் ஆண்கள், தினம்தோறும் அவர்கள் மட்டும் அந்த விஷயத்தில் ஒரே மாதிரி செயல்படுதல் குறித்து யோசிப்பது இல்லை. எனவே, ஆண்கள் நிறைய வெரைட்டிகளைக் கையாள வேண்டும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்