Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பொண்ணுங்க கிட்ட பசங்க எதிர்ப்பாக்குற அழகு என்னன்னு தெரியுமா...!

பொண்ணுங்க கிட்ட பசங்க எதிர்ப்பாக்குற அழகு என்னன்னு தெரியுமா...!

6 பங்குனி 2015 வெள்ளி 10:51 | பார்வைகள் : 16449


 இயல்பாகவே, ஆண்கள் பெண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும், பெண்கள் ஆண்களின் எதிர்ப்பார்ப்பிற்கு நிகராகவும் தான் இருக்க ஆசைப்படுவார்கள். பொதுவாகவே பெண்களிடம் ஆண்கள் ஹாலிவுட் அளவில் பளபளப்பான, வழுவழுப்பான அழகை எல்லாம் எதிர்பார்பதில்லை. பெண்கள் தான் தேவையின்றி அதிக சிரமப்படுகின்றனர். ஆண்கள் எப்பொழுதும் எளிமையாக இருப்பவர்கள், அதற்கென்று அவர்கள் எளிமையான பெண்களை எதிர்பார்க்கின்றனர் என எண்ணிவிட வேண்டாம். ஆனால், ஆண்கள் அதீத அளவிலும் அழகை எதிர்ப்பார்ப்பதில்லை.

 
தமிழ்நாட்டு பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்ப்பது எல்லாம். பார்ப்பதற்கு லட்சணமாக இருக்க வேண்டும். பார்ப்பதற்கு நம் நாட்டு பெண் போல இருக்க வேண்டும். ஆண்கள், ஹாலிவுட் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள் தான் என்றாலும். அது ரசிக்க மட்டும் தான். பிட்சாவும், பர்கரும் என்றோ ஒருநாள் சாப்பிட தான் நன்றாக இருக்குமோ தவிர. நம் நாட்டு சூழ்நிலைக்கு சாம்பார் சதமும், தயிர் சாதமும் உடலுக்கு ஒத்துப்போகும்.
 
எனவே, ஆண்களை கவர்ந்திட அதிகம் சிரமப்படுவதைத் தவிர்த்து, அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு குறைவில்லாத அளவில் மட்டும் மேக்-அப் செய்வது நல்லது! அதீத முறையல் அழகை ஏற்றிக்கொண்டு ஆங்கிலப்படத்திலும் வரும் வெண்ணிற பூதம் போல போய் நின்றீர்கள் என்றால், பயந்து தெறித்து தான் ஓடுவார்கள்! சரி, இனி பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்க்கும் அழகினை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்...
 
சில பெண்களுக்கு நல்ல அடர்த்தியான புருவம் இருக்கும். சிலருக்கு மெலிசான கோடு போல இருக்கும். உங்கள் புருவம் எப்படி இருந்தாலும். திரெட்னிங் செய்யும் போது பெண்கள் வில் போல நன்கு வளைந்து உள்ளது போல செய்யுங்கள். இது உங்கள் கண்ணை நன்கு அழகாக எடுத்துக்காட்டும். ஆண்கள் விரும்புவதும் அதுதான்.
 
நம் நாட்டு பெண்கள் முற்றிலும் மறந்த ஒன்று, மஞ்சள் தேய்த்து முகம் கழுவுவது. ஆனால் அதில் உள்ள கவர்ச்சியை அவர்கள் புரிந்துக்கொள்வது இல்லை. கவர்ச்சிக்கு மட்டுமல்ல மஞ்சள் தேய்த்து குளிப்பதனால், பெண்களின் அழகும் கூடும், சரும பிரச்சனைகளும் குறையும்.
 
ஆண்கள், பெண்களிடம் எதிர்பார்க்கும் முக்கியமான ஒன்று என இதை கூறலாம், சிவந்த இதழ்கள்! கவர்ச்சியான அழகு, கவர்ச்சிக்கு மயங்காத ஆண்கள் எங்கு தான் இருகின்றனர். எனவே, பெண்கள் அவர்களது இதழ்களை சிவப்பாக வைத்துக் கொள்வது அவசியம்.
 
இப்போதெல்லாம் பெண்கள் மொட்டை மட்டும் தான் அடித்துக்கொள்வது இல்லை. மற்றபடி ஷார்ட்-கட் வரை முடியை திருத்திக்கொள்கின்றனர். ஆனால், உங்களுக்கு தெரியுமா நீளமான கூந்தல் ஒருவகையில் கவர்ச்சியின் அறிகுறி. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. நீண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு அந்த விஷயத்தில் உணர்ச்சி அதிகமாக ஏற்படும்.
 
புன்னகைக்கும் பெண்கள் என்றால் ஆண்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அதிலும் முத்து போல அழகான பற்களுடைய பெண்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும். எனவே, பெண்கள் தங்களது பற்கள் மீது அக்கறை கொள்ள வேண்டியது அவசியம்.
 
நீங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும், முகப்பரு அதை முற்றிலுமாக கெடுத்துவிடும். எனவே, முகப்பருக்களை அகற்றுவதற்கான வேலைகளில் ஈடுபடுங்கள். பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்தாலே எந்த சரும பிரச்சனைகளும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மாசு, மருவற்ற சருமம். ஆண்களை கவர்ந்திட பெண்கள் எளிதான அழகு குறிப்புகளை பின் பற்றினாலே போதுமானது. பளபளப்பான சருமம் வேண்டுமென கண்டதை எல்லாம் முகத்தில் அப்பளை செய்து சருமத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஆண்கள் எதிர்ப்பார்ப்பது மாசு, மருவற்ற எளிமையான அழகு மட்டும் தான்
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்