Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உடலுறவில் ஈடுபட்ட பின் பெண்கள் அழுவது ஏன்?

உடலுறவில் ஈடுபட்ட பின் பெண்கள் அழுவது ஏன்?

22 தை 2016 வெள்ளி 10:29 | பார்வைகள் : 15785


 தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு சில சமயங்களில் பெண்கள் சோகமாகவோ அல்லது அழவோ தொடங்கிவிடுவார்கள். ஒருவேளை தான் ஏதோ தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் ஆண்களுக்கே கூட வரலாம் ஆனால் இது ஒருவகையான உளவியல் கோளாறு என ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

 
 
சில கசப்பான அனுபவங்கள், உறவில் ஈடுபடும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், உளவியல் ரீதியான சிந்தனைகள் போன்றவை தான் பெரும்பாலும் பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பிறகு அழுது அல்லது சோகமாக காணப்பட காரணமாக இருக்கிறதாம். மேலும் இவை எதனால் ஏற்படுகிறது, ஏன் அவர்கள் எந்த பதிலும் கூறுவதில்லை என்பது வியப்பாக இருக்கிறது.... 
 
சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வில், பொதுவாகவே ஐம்பது சதவீத பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு விளக்கமே இல்லாமல் சோகமாக அல்லது அழுகிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
 
இவ்வாறு காரணமே இன்றி பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சோகமாக இருப்பது சேர்க்கைக்கு பிறகான பதட்டநிலை (postcoital dysphoria) என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் பதட்டம், மன அழுத்தம் ,அழுகை ஏற்படலாம்.
 
இதிலிருக்கும் ஒரே நல்ல விஷயம் என்னவெனில், இதற்கு ஆண்கள் காரணம் இல்லை என்பது தான். இந்த ஆய்வில் கலந்துக் கொண்ட பெண்கள் இதை விளக்க முடியாத உணர்வாக தான் கூறியுள்ளனர்.
 
உடல்கூறு ரீதியாக பார்க்கையில் ஆண், பெண் உடல் வேறுப்பட்டு இருக்கிறது. உறவில் ஈடுபடும் போது உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதில் நரம்பியல் ஹார்மோன்களிலும் கூட உறவில் ஈடுபடும் போது நிறைய மாற்றங்கள் ஏற்படும். இதனால் கூட அவர்களுக்கு கண்ணீர் தூண்டப்படலாம் என பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் லோரி ப்ரோட்டோ கூறியுள்ளார்.
 
முந்தைய காலத்தில் குழந்தையாக இருந்த போது அல்லது பதின் வயதில் ஏற்பட்ட பாலியல் ரீதியான கசப்பான அனுபவங்கள் அவர்களது மனதை விட்டு நீங்காது இருந்து உறவில் ஈடுபடும் போது அழுகை வர காரணமாக இருக்கலாம். இதுவும் கூட சேர்க்கைக்கு பிறகான பதட்ட நிலையை அதிகரிக்க கூடும்.
 
உறவில் ஈடுபடும் போது கருப்பை வாயில் பலமாக மோதல் ஏற்பட்டிருந்தால் கூட பெண்களுக்கு உறவில் ஈடுபடும் போது அழுகை வர வாய்ப்புகள் இருக்கின்றன.
 
முதல் முறை உறவில் ஈடுபடும் போது பெரும்பாலும் சோகம் அல்லது அழுகை வருகிறது என ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
உறவில் ஈடுபட்ட பிறகு பெண்கள் சோகமாக காணப்பட்டால் ஆண்கள், ஏன் என்று கேளுங்கள். பதிலை எதிர்பார்க்க வேண்டாம். ஏன் என்று கேட்டும் அவர்கள் எந்த பதிலும் கூறாமல் இருந்தால் அவர்களது மீண்டும், மீண்டும் கேள்வி கேட்க வேண்டாம். அவர்களாக பதில் கூறும் வரை விட்டுவிடுங்கள். 
 
சில சமயங்களில் வேறு சில நிலைகளில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுவதால் கூட பெண்கள் சோகமாக அல்லது வலியின் காரணமாக கண்ணீர் சிந்தலாம். எதுவாக இருப்பினும் உங்கள் துணை மீது அக்கறை கொண்டும், அவர்களது நிலை அறிந்தும் செயல்படுங்கள் என ஆய்வாளர் லோரி ப்ரோட்டோ கூறியுள்ளார்.
 
சில சமயங்களில் பெண்களுக்கு பிறப்புறுப்பு அல்லது இடை, இடுப்பு பகுதிகளில் ஏதேனும் பலவீனம் இருப்பினும் கூட அவர்கள் அசௌகரியமாக உணரலாம். எனவே, தொடர்ந்து இவ்வாறு இருந்தால் இதற்கான சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்