தாம்பத்தியத்தின் ஆயுட்காலம் தெரியுமா?
12 பங்குனி 2016 சனி 11:25 | பார்வைகள் : 14362
ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான தம்பதிகளுக்குள் எத்தனை வயது வரை தாம்பத்திய உறவு நீடிக்கிறது என்று கேட்டால், 70 வயது என்று பதிலளிக்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.
அமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர், வயதான ஆண் மற்றும் பெண்களின் தாம்பத்ய உணர்வு குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் இறுதி முடிவாக, பொதுவாக, முதுமை காலத்தில் ஆண்களுக்கு பெண்களை விட தாம்பத்திய உணர்வு அதிகமாக உள்ளது. மேலும், ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை தாம்பத்திய உணர்வு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சராசரியாக 30 வயதுடைய ஆண்கள் மேலும் 35 ஆண்டுகள் வரையும், பெண்கள் 31 ஆண்டுகள் வரை தாம்பத்தியத்தில் ஈடுபாடு காட்ட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
55 வயதான ஆண்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு அதாவது 70 வயது வரை தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும் என்றும் அந்த ஆய்வுக் கூறுகிறது.
ஆய்வு முடிவுகள் எதுவாக இருந்தாலும், உடல் நிலையும், மனநிலையும்தான் 100 வயதிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட வைக்கும் கருவி என்பதை மனதில் கொள்ளவும்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan