பெண்கள் எந்த மாதிரியான ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள்
7 சித்திரை 2016 வியாழன் 09:14 | பார்வைகள் : 14955
பெண்களின் பார்வையில். ஆணென்றால் இப்படி தான் இருக்க வேண்டும்?
1 பெண்மையை உணர்தல்
பெண்மையை உணராத வரை ஒருவன் முழுமயான ஆண் மகனாக இருக்க இருக்க முடியாது. பெண்களின் உடலமைப்பை மட்டுமே ரசிப்பவன் இச்சைக்கு மட்டுமே அணுகுபவன். பெண்மை, அவர்களது உணர்வுகள் போன்றவற்றை நீங்கள் புரிந்து, உணர்ந்து நடந்துக் கொண்டாலே அவர்கள் உங்களை விரும்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
2 தன்னிலை அறிதல்
தான் யார் என்று அறிந்தவன் தான் நிஜமான ஆண். நான் யார், எனக்கு என்ன செய்ய வரும், வராது என்று அறியாத ஒருவன் எப்படி அவனது குடும்பம் அல்லது சூழலை அறிந்து நடந்துக் கொள்ள முடியும்.
3 நேர்மை
பொதுவாகவே மனிதர்கள் மத்தியில் அதிகம் தேவைப்படுவது இந்த நேர்மை தான். ஆனால், அது தான் இங்கு பசியை மிஞ்சம் அளவு பஞ்சத்தில் இருக்கிறது. வீட்டையும், நாட்டையும் வழிநடத்தும் ஆண் ஆகியவம் கண்டிப்பாக நேர்மையாக இருக்க வேண்டும்.
4 பணிவு
பெண்களிடம் பணிவாகவும், தான் பலமானவன் என்பதை பெண்களை துன்புறுத்தி வெளிக்காட்டாமல், அவர்களை பாதுகாத்து வெளிப்படுத்த வேண்டும்.
5 அகம்பாவம் இன்மை
தான் என்ற அகம்பாவம் இருப்பது கூடாது. இது தன்னை மட்டுமின்றி, தன் உறவுகள் மற்றும் சுற்றி இருப்பவர் மத்தியிலான பெயரையும் கூட கெடுத்து விடும்.
6 நேர்மறை எண்ணங்கள்
ஓர் ஆண், முடியாது, கடினம், அது தோல்வி அடைந்துவிடும் என்பவற்றை நிறுத்தி, முயன்றால் முடியாதது ஏதும் இல்லை என்ற நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
7 தவறுகளை ஒப்புக்கொள்ளுதல்
தவறுகளை ஒப்புக்கொண்டு, திருத்திக் கொள்பவன் தான் வெற்றியை ருசிக்க முடியும், குறைந்தபட்சம் தன் வாழ்வில் அடுத்த படியையாவது தாண்ட முடியும். எனவே, தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள், வீண் பிடிவாதத்தை கைவிடுங்கள்.
8 காவலனாக இருத்தல்
ஓர் ஆண், தாய், தங்கை, தோழி, மனைவி, மகள் போன்றவர்களுக்கு சிறந்த காவலானாக இருக்க வேண்டும். தன் வீட்டு மற்றும் தன்னை சுற்றியிருக்கும் பெண்களை காப்பவனே சிறந்த ஆண் மகன்.
உன்னை அறிந்தால் உள்ளம் மகிழ்ச்சி பொங்கும் உன் வாழ்வில்
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan