Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

வயதானால் என்ன மன்மதக்கலை சொன்னால்தான் தெரியுமா?

வயதானால் என்ன மன்மதக்கலை சொன்னால்தான் தெரியுமா?

11 வைகாசி 2016 புதன் 11:47 | பார்வைகள் : 11938


 வயது அதிகரிப்பது இயற்கையின் நியதி. அதை யாரும் தடுக்க முடியாது. அதற்காக 50 வயதில் 20 வயதுக்குரிய இளமையுடன் இருக்க விரும்புவது பேராசை. பேராசையால் கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டால் சிறுநீரகங்களையும் கல்லீரலையும் கெடுத்துக் கொள்ளத்தான் நேரிடும்.

 
30 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. ஒருவரால் பிரியாணி சாப்பிட முடியாமல் போனால் பருப்பு சாதமாவது சாப்பிட்டு திருப்திபட்டுக்கொள்வார் அல்லவா? அது போலத்தான் செக்ஸும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இருபது வயதில் கவர்ச்சி உடையுடன் ஒரு பெண்ணைப் பார்த்தாலே ஆண்குறி விறைப்புத் தன்மையை அடைந்துவிடும். 30-35 வயதில் பெண் தொட்டு தூண்டினால்தான் விறைப்புத் தன்மை ஏற்படும். 
 
50 வயதுக்கு மேல் தொடுதலுக்கு மேலும் சில சமாசாரங்கள் தேவைப்படும். 50 வயதுக்கு மேல் தோலில் சுருக்கங்கள் உண்டாவதால் விறைப்புத்தன்மை பெரிய அளவில் இருக்காது. ஆனால், இது கலவிக்கு தடை இல்லை. செக்ஸை தூண்டும் ஹார்மோன்களின் அளவு குறையும். உற்பத்தியாகும் விந்தின் அளவு குறைவாக இருக்கும்.
 
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது செக்ஸை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடும். இதனால் கலவியின் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது. 
 
இணையுடன் இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு கூடச் செல்லலாம். இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும். படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், மனதுக்குப் பிடித்த நிறமுள்ள படுக்கை விரிப்புகள் அமைப்பது, இனிமையான இசை கேட்பது என மாற்றிக்கொண்டால் நல்ல கலவியை அந்தச் சூழலே தூண்டும்.
 
கலவிக்கு முன்னால் அதைத் தூண்ட சிறந்த ஃபோர் ப்ளேவும் (Fore play) அவசியம். அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருப்பது இன்னும் நலம். மனம் சார்ந்த எந்தப் பிரச்னைகளும் ஏற்படாது.
 
ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை கொடுக்கவேண்டும். அவ்வப்போது செக்ஸிலும் ஈடுபடுதல் வேண்டும். வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
 
வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே செக்ஸை வேண்டும் அளவுக்கு அனுபவித்து விடுவது நல்லது. காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்