Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஆண்கள் பெண்களுக்குச் செய்யும் 10 கொடிய விஷயங்கள்!!!

ஆண்கள் பெண்களுக்குச் செய்யும் 10 கொடிய விஷயங்கள்!!!

3 ஆனி 2016 வெள்ளி 10:12 | பார்வைகள் : 12474


 ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் விரும்பத்தக்க உறவாக இருப்பது காதலன், கணவன் என அவர்களது வாழ்க்கையில் வரும் ஒரு ஆணின் உறவு மட்டும் தான். அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், காதலையும் கொட்டிக் கொடுக்கும் ஆண்களுக்கு, மூர்க்கத்தனம் நிறைந்த மற்றொரு பக்கமும் இருக்கிறது. 

 
காதல் நிறைந்த அவர்களின் ஒரு பக்கத்திற்காக அவர்களை விரும்பலாம் அல்லது மூர்க்கத்தனமான மற்றொரு பக்கத்திற்காக அவர்களை வெறுக்கலாம். ஆனால் எந்தப் பெண்ணாலும் அவர்களது வாழ்க்கையில் ஆண்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது.
 
இப்படி காதலும், மூர்க்கத்தனமும் ஒரு சேர நிறைந்த ஆண்கள், தாங்கள் பெரிதும் விரும்பும் பெண்களுக்கே கூட தங்களுக்கே தெரியாமல் பலவகைகளில் கொடுமைகள் புரிவதில் வல்லவர்கள். அப்படி ஆண்கள், பெண்களுக்குச் செய்யக்கூடிய 10 கொடிய விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். 
 
இதில் கொடுமை என்னவென்றால் இந்த செயல்கள் எல்லாம் தவறுகளே அல்ல, மிக இயல்பானவை தான் என்று ஆண்கள் நினைப்பதுதான்!! சரி, அந்த கொடிய விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!!
 
 
மிகப்பெரும் தன்முனைப்புடன் செயல்படுதல்
தெரியாத இடத்திற்கு போக வேண்டியிருந்தால், ஆண்கள் பெரும்பாலும் யாரிடமும் வழி கேட்க மாட்டார்கள். எவ்வளவு எரிபொருள், நேரம் வீணானாலும் தாங்களே கண்டுபிடிக்க வேண்டுமென அலைந்து கொண்டே இருப்பார்கள். 
 
ஆண்களின் தன்முனைப்பை (ego) மையப்படுத்திய செயல்பாடுகளுக்கு இது ஒன்றே மிகப்பெரிய உதாரணம். இத்தகைய தன்முனைப்பை ஆண்கள் நிச்சயம் காதலியிடம் கூட காண்பிப்பார்கள்குறிப்பிட்ட விசயங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளல்
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் பெயர்களையும், அவர்களின் சாதனைகளையும் அட்சரம் பிசகாமல் நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தவர்கள், நெருக்கமானவர்களின் பிறந்த நாட்கள் மற்றும் ஆண்டு விழாக்களை நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் மறக்கும் ஒரு வித்தியாசமான நோயால் அவர்கள் மூளைகள் அவஸ்தைப்படுகின்றன.
 
 
கடைக்கண்ணால் பார்த்தல் (குறிப்பாக மார்பகங்களை)
ஆண்கள் அனைவருமே பெண்களின் மார்புகளை கடைக்கண்ணில் பார்க்கும் வழக்கமுடையவர்கள் என உலகெங்கிலும் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்து, அவர்கள் ‘ஜொள்’ வடிக்கும் போது தர்ம சங்கடத்திற்கு உள்ளாவது, அவர்கள் பார்க்கும் பெண் மட்டுமல்லாது, அவர்கள் அருகில் இருக்கும் பெண்ணும் தான்! காதலியுடன் வெளியில் செல்லும் தருணங்களில் கூட, ஆண்கள் பிற பெண்களை பார்க்காமல் விடுவதில்லை!
 
வெளிப்படையாகவே பொறாமைப்படுதல்
அநேகமாக ஆண்கள், இந்த குணத்தை தங்கள் தாயிடமிருந்து தான் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மிகுந்த பொறாமைக் குணம் உடையவர்கள் என குற்றம் சொல்லும் ஆண்கள், தங்கள் காதலி வேறொரு ஆணைப் பற்றி பேசினால் கூட உச்சக்கட்ட பொறாமை கொள்கிறார்கள்.
 
 
பாசாங்கில் பெருமை கொள்ளுதல்
மிகவும் சுதந்திரமான மற்றுட்ம மிகவும் நவநாகரீகமான பெண்ணுடன் பழகுவதே ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும், தங்கள் தாய்க்கு அறிமுகம் செய்யும் சமயங்களில் அடக்கமான பெண்களையே விரும்புவார்கள். 
 
ஊர் சுற்றும் போது நவநாகரீகமான உடைகளை அணிவதையும், வித்தியாசமான சிகையலங்காரத்தையும் விரும்பியவர்கள், திருமணத்தின் போது மட்டும் நேர்மாறான பெண்களைத் தேடுவது தான் ஆண்களின் மோசமான செயல்களிலேயே முதன்மையானது!
 
அளவுக்கு அதிகமான அக்கறை காட்டுதல்
வீட்டை விட்டு வெளியே கால் வைத்ததிலிருந்து, “எங்கே இருக்கிறாய்?” என நச்சரித்துக் கொண்டே இருக்கும் தொலைபேசி அழைப்புகளை தான், அளவுக்கு அதிகமான அக்கறை என்கிறோம். ஆண்களின் இந்த அளவுக்கு அதிகமான அக்கறை பெண்களுக்கு ஒரு கட்டத்தில் எரிச்சலாக மாறிவிடுகிறது. பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் வருவதற்கு முன்பும், இந்த உலகில் பெண்கள் கவனமாகத் தான் வாழ்ந்தார்கள் என்பதை ஆண்கள் உணருவதே கிடையாது. இதைப் படிக்கும் போதாவது சில ஆண்கள் திருந்தினால் சரி.
 
எல்லாம் வல்ல ஆணாக வலம் வருதல்
உதவிகள் செய்ய முடிந்த ஆணாக இருப்பது நல்லது தான். அதற்காக “இந்த உலகில் என்னால் ஆகாத காரியமே கிடையாது” என்ற ரீதியில் அலைவது நன்மையை விட தீமையையே உருவாக்கும். குறிப்பாக தன்னால் குழாய்ப் பணியாளர், மின்னாளுனர், பொருளாதார வல்லுனர், ஆசாரி போன்றோரின் வேலைகளையெல்லாம் செய்ய முடியும் என நினைக்கும் போது கண்டிப்பாக தீமை தான்! ஏனெனில்
 
உணர்வுகளை உதாசீனப்படுத்துதல்
பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றாலும், ஆண்களைப் போல் அல்லாது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் விஷயங்களை செய்வதில் வல்லவர்கள். பெண்களின் உணர்வுகளை கிண்டலடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால், ஆண்கள் வாழ்வில் சிறப்பாக வாழ்வது நிச்சயம்.
 
நண்பனை வழிபடுதல்
திருமணத்திற்குப் பிறகு, எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதில் ஆண்களுக்கு ஏற்படும் குழப்பம், பெண்களை எரிச்சலடையச் செய்கிறது. ஏனெனில் தன்னுடன் தனியாக நேரம் செலவழிக்க விரும்பும் காதலியை நொந்து கொள்ளும் ஆண்கள், ரம்மியமான காதல் பொழுதுகளில் கூட நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு கூத்தடிப்பது நியாயம் தானா என்பதை ஆண்கள் யோசிக்க வேண்டும்.
 
உடலுறுவு சமயங்களில் காமப்பிசாசாக நடத்தல்
உடலுறவின் போது ஆர்வத்துடன் ஒத்துழைக்கும் ஆணை பெண்களுக்குப் பிடிக்குமென்றாலும், பாலுணர்வைத் தூண்டும் படங்களைப் பார்த்து, அதில் காண்பிக்கப்படும் உடலுறவுக் காட்சிகளைப் போன்றே நிஜத்திலும் வேண்டும் என ஆண்கள் விரும்பும் போது, அது பெண்களுக்கு மிகுந்த சங்கடத்தையே தருகிறது. பெண்களும் விரும்பும் வண்ணம் உடலுறவு கொள்ளாமல், அவர்களை நிர்பந்தத்திற்கு உட்படுத்தி தோற்ற பின், ஒத்துழைக்கவில்லை என குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை
 

வர்த்தக‌ விளம்பரங்கள்