Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

காதல் கல்யாணம் எப்போது கசக்கும்?

காதல் கல்யாணம் எப்போது கசக்கும்?

29 புரட்டாசி 2018 சனி 15:26 | பார்வைகள் : 12485


 அந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் அனைத்து இல்லற வாழ்விழும் மந்தம் தட்டும். தாம்பத்திய வாழ்க்கை ஓய்ந்து விடும். ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து விடும். இது இயல்பு தான். எனினும் 100ல் 10 பேர் 60 70 வரையிலும் அன்பும் பாசமும் வழியும் வாழ்வை பெறுகின்றனர். இவர்கள் வரம் பெற்றவர்களா?

 
தாம்பத்திய வாழ்வில் கசப்பு ஏன்? மற்றும் அக்கசப்பை அப்புறபடுத்துவது எப்படி? என பிரபல மனோதத்துவ மருத்துவர்கள் விளக்குகின்றனர். படித்து பயன் பெறுங்கள்.
 
 
தாம்பத்தியத்தில் கசப்பு வந்து விட்டதா? எப்படி கண்டுபிடிப்பது?
 
* வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் உடல் அலுப்பாக இருக்கிறது என்று தாம்பத்தியத்தை ஒதுக்குகிறீர்களா? இல்லை தாம்பத்தியம் வேண்டாம் என்று உடல் அலுப்பை காரணம் காட்டுகிறீர்களா? இரண்டாவது ஒன்று தான் நீங்கள் செய்கிறீர்கள் என்றால் உங்கள் தாம்பத்தியம் கசப்பை கக்க தொடங்கியுள்ளது என புரிந்துக்கொள்ளுங்கள்.
 
* மனைவியை எரிந்து கொட்டி திட்டிவிட்டு பின் மன்னிப்பு கேட்பீர்களா? இல்லை அப்படியே மறந்து விட்டு வேறு வேலையை பார்த்துக்கொண்டு போகிறீர்களா? இங்கு தாம்பத்தியம் எந்த நிலையில் இருக்கிறது என தெரிந்துக்கொள்ளலாம்.
 
* உணவில் ருசி இருந்தும் நாவில் தென்படவில்லையா?
 
* வீட்டிற்கு செல்லும் ஆர்வம் குறைந்து விட்டதா?
 
* விடுமுறைகளில் இருவரும் சேர்ந்து செலவிட்ட தருணங்களை இப்போதும் காண முடிகிறதா?
 
* வீட்டில் பட்ஜட், குழந்தைகள் பற்றி மட்டும் தான் பேச்சு எழுகிறதா? கேலி கிண்டல் செய்து சிரித்து பேசும் தருணங்கள் இப்போது எல்லாம் கிடைப்பதில்லையா?
 
இதுவெல்லாம் தாம்பத்தியம் கசந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறிகள்.
 
எப்படி சரி செய்வது?
 
* விடுமுறைகளை வீட்டில் கழிக்காமல் கணக்கிட்டு வெளியே சென்று வாருங்கள்.
 
* கோபத்தில் திட்டினால் அன்று இரவு உணவு வேலையில் மன்னிப்பு கேட்டுவிடுங்கள். சண்டைக்குப்பின் வரும் கூடல், சாதாரணத்தை விட இனியது.
 
* மனைவி தாய் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டால் அனுப்பி வையுங்கள். பிரிவின்போது ஒரு ஏக்கம் வரும். நினைவெல்லாம் உங்களிடம் தான் இருக்கும். 2 நாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் உங்களிடம் திரும்பி வந்து விடுவார். குட்டி குட்டி பிரிவுகள், சண்டைகள் நன்மைதான்.
 
* பிள்ளைகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் தனிமையை ரசித்து அனுபவியுங்கள். பாட்டி தாத்தா இல்லை எனில் பள்ளிக்கு சென்று விடும் நேரத்தில் பாச வலையை வீசுங்கள்.
 
* காமம் இல்லையெனினும், காதலோடு அவ்வப்போது தொட்டு துணையின் பரிசத்தை உணருங்கள்.
 
* மற்றவர்களை பற்றி பேசுவது தவறு என்றாலும், 4 சுவற்றிற்குள் எதுவும் தவறில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துணையின் தோழர்களை பற்றி கோபமாக குறை சொல்வதை குழந்தையாக பாவித்து ரசித்து கேளுங்கள்.
 
* இரண்டாவது ஹனிமூன் தவறில்லை. ஒப்புக்கொள்ளுங்கள்.
 
* பணிக்கு செல்லாமல் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். துணையுடன் இனிமையான விசயங்களை பகிர்ந்து பொழுதை போக்குங்கள். தவறில்லை.
 
இதுபோன்ற விசயங்களை செய்து வந்தால் கணவன் மனைவி இடையே ஈர்ப்பு என்றென்றும் குறையாமல் இருக்கும். வீடும் வசந்தமாக மாறும். 

வர்த்தக‌ விளம்பரங்கள்