மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரிடம் கூற கூடாதவைகள் என்ன?

19 புரட்டாசி 2017 செவ்வாய் 17:32 | பார்வைகள் : 11321
மன அழுத்தம் சமீப காலங்களில் பெரும் சிக்கலான விஷயமாக மாறி வருகிறது. இது ஒரு உளவியல் பூர்வமான ஆரோக்கிய நிலை.
அவர்களின் அப்போதைய நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சமயங்களில் நாம் சொல்லும் விஷயங்களில் மிகவும் கவனம் தேவை.
நாம் செய்யும் அலட்சியமான செய்கைகளால் விபரீதமான நிகழ்வுகள் கூட ஏற்படும். எனவே மன அழுத்தத்தில் இருப்பவரிடம் சொல்லக் கூடாதவை என்ன? இங்கே காணலாம்.
1 - ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறான சகிப்புத்தன்மை அளவுகள் உண்டு. எனவே மற்றவரின் பிரச்னைகள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நன்மையும் பயக்காது. அவர்களின் மன அழுத்தமும் குறைய வாய்ப்பில்லை. மன அழுத்தம் பாதிக்கப்பட்ட நபரிடம், நம்முடைய பிரச்னைகளை கொட்டி விடக் கூடாது. அது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கி விடும்.
2 - மன அழுத்தத்தை எளிதில் நீக்கி விடமுடியாது. அதுபோன்ற சமயங்களில் யாரிடமும் அவ்வளவு எளிதாக பேசத் தோன்றாது. யாரும் தன்னை சமாதானம் செய்யவும் மனம் விரும்பாது. நம்முடைய அனைத்து உடல் பாதிப்புகளையும் மருத்துவ ரீதியாக அணுகுவது தவறு. தூக்க மாத்திரைகள் கூட ஓரளவுக்கு தான் நிவாரணம் அளிக்கும். அவர்கள் தமது பிரச்னைகளை யாரிடமாவது பகிர வேண்டும் என்று எண்ணுவர். அதனால் அவர்களுக்காக நேரம் செலவிட்டு, பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும்.
3 - மனதை திசை திருப்புவது, சரியான தீர்வாக அமையாது. அதனால் பிரச்னைகளை விட, அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது ஒரு விஷயத்தை கூறி, அவர்களை மேலும் சிக்கலாக்கக் கூடாது. கவலைப்படாதீங்க! சின்ன விஷயத்துக்கு ஏன்பா வருத்தப்படறே? எனக் கேட்க கூடாது. அது அவர்களின் பிரச்னைகளை நாம் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, பேசுவது போல் எண்ணி விடுவர்.
4 - மற்றவர்களின் பிரச்னைகளை ஒப்பிட்டு ஆறுதல் கூறக் கூடாது. பொதுப் படையாக பிரச்னையை பேசித் தீர்க்க நினைக்க கூடாது. அவர்களிடம் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்க வேண்டும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை நாம் உணர முடியாது. ஒவ்வொருவருக்கும் வலியின் அளவு மாறுபடும்.
5 - பாதிக்கப்பட்டவர்களை பிறருடன் பேசிப் பழகச் சொல்ல வேண்டும். வீட்டை விட்டு வெளியே சென்று உலவி வரச் செய்ய வேண்டும். மன அழுத்தத்துடன் இருப்பது தலையில் 10 கிலோ எடையை தூக்கி சுமப்பதற்கு சமம். அதனால் அந்த சுமையை அப்படியே எளிதாக தூக்கி வைத்து விடச் சொல்லக் கூடாது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025