Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

உறவு தொடங்கும்போது இந்த விஷயத்தில் கவனமா இருங்க..!

உறவு தொடங்கும்போது இந்த விஷயத்தில் கவனமா இருங்க..!

8 ஆவணி 2021 ஞாயிறு 09:57 | பார்வைகள் : 12955


 ஆண் பெண் இருவரும் உடல் ரீதியாக ஒன்றாக இணைவது என்பது ஆனந்தத்தை தரும் ஒரு நிகழ்வாகும். இந்த தருணங்களில் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து உறவில் ஈடுபடுவது அவசியம். பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சில வழிகளை மேற்கொள்ளலாம்.

 
உறவு தொடங்கும்போது அது பெண்களுக்கு அதீத சிலிர்ப்பினை ஏற்படுத்துகிறது. ஆண்கள் இதுபோன்ற தருணங்களில் சில தந்திரங்களை வைத்திருந்தாலும், பெண்களும் இதில் முழு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியது ஆரோக்கியமான உறவிற்கு அவசியமானது. உங்கள் பார்ட்னர் உங்கள் உணர்வுகள் மற்றும் எண்ணங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாத போது உறவு கொள்வது என்பது சிறிது கடினமான காரியமாக உள்ளது. ஆனால் இதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. பெண்கள் உறவை தொடங்குவதற்கு முன் கிரியேடிவ் ஆன சில வழிகளை தேர்வு செய்யலாம்.
 
 
​கவர்ச்சிகரமான உடை
 
சிவப்பு நிற உள்ளாடையில், ஜல்லடை போன்ற கருப்பு நிற மேலாடை அணிவது உங்கள் பார்ட்னரின் உணர்ச்சியை தூண்ட உதவும். உங்கள் பார்ட்னர் வருவதற்கு முன் இது போன்ற உள்ளாடைகளை அணிந்து இருந்து அவரை வரவேற்கும் போது, அவருக்கு தானாகவே உறவு கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது. மேலும் நீங்கள் அவருக்காக மட்டுமே இவ்வாறு காத்திருக்கிறீர்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள முடியும். நீங்கள் இப்படி செய்யும் பொழுது உங்களது உறவில் எப்படி மேஜிக் நிகழ்கிறது என்று பாருங்கள்.
 
​செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு முன்
 
 
 
உங்கள் பார்ட்னர் வீட்டுக்கு வருவதற்கு முன்பே அவரை உணர்ச்சியூட்ட வேண்டுமென்று நீங்கள் திட்டமிட்டால், உறவைப் பற்றிய சின்ன சின்ன உரையாடல்கள், அவரது உணர்ச்சியை தூண்டும். சில்மிஷம் ஆன சில மெசேஜ்கள் மற்றும் உங்களது கவர்ச்சிகரமான புகைப்படத்தை அவருக்கு குறுந்செய்தி மூலம் அனுப்புதல் போன்றவை கூட அவரின் உணர்ச்சியை தூண்ட எளிதானதாக இருக்கும்.
 
​பாலியல் உணர்வைத் தூண்டும் படங்கள்
 
நீங்கள் இரவு நேரத்தை மிகவும் உணர்ச்சிகரமாக மாற்ற வேண்டுமென்றால் முதலில் பாலியல் எண்ணங்களை தூண்டும் படங்களை பார்க்க தயாராகுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் படங்களில், உணர்ச்சியை தூண்டும் காட்சிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது போன்ற செயல்களின் மூலம் உங்கள் பார்ட்னருக்கு நீங்கள் தயாராக இருப்பதை உணர்த்தலாம்.
 
​கடந்த கால நினைவுகள்
 
உறவின் போது உங்கள் கடந்தகால நினைவுகள் மற்றும் பயணங்களை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம். உங்களது உரையாடல்களில் நீங்கள் முழுமையாக செக்ஸ் கொண்ட தருணங்களையும் இடங்களையும் பற்றி பேசலாம். கடந்த கால அனுபவங்கள் எப்போதுமே உணர்ச்சியை தூண்ட நல்ல ஒரு முயற்சியாக இருக்கும்.
 
​உணர்வுகளை தூண்டும் வார்த்தைகள்
 
சின்னச்சின்ன வேடிக்கையான குறியீடுகள் நீங்கள் உங்கள் பார்ட்னருடன் உறவு கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை கூறுவதற்கான சிறந்த வழியாக இருக்கும். சில நேரங்களில் பல நண்பர்களுக்கு இடையே நம்மால் நமது உணர்வுகளை வெளிப்படையாக கூற முடியாது. அந்த மாதிரி தருணங்களில் நீங்கள் இது போன்ற சின்னச் சின்ன சில்மிஷ குறியீடுகளைப் பயன்படுத்தி உங்கள் பார்ட்னரை உற்சாகப்படுத்தலாம். உங்களின் உற்சாகம் இந்த வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வினை உங்களுக்கு கொடுக்கும்

வர்த்தக‌ விளம்பரங்கள்