Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஆண் எவ்வளவு நேரம் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட முடியும்?... ஆய்வு முடிவுகள் இதோ..!

ஆண் எவ்வளவு நேரம் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட முடியும்?... ஆய்வு முடிவுகள் இதோ..!

2 பங்குனி 2022 புதன் 12:15 | பார்வைகள் : 17604


 ஆண்கள் உடலுறவின் போது விரைவாக விந்து வெளியேறுவதை தடுக்க போராடி வேண்டியிருக்கும். அதனால் உறவை நீண்ட நேரம் நீட்டிக்க வேண்டிய அழுத்தம் ஆண்களுக்கு உள்ளது. உண்மையில் எத்தனை நிமிட உடலுறவு போதுமானது அல்லது எத்தனை நிமிடங்கள் மிகக் குறைவு? என்பது பற்றிய ஆய்வில், அமெரிக்காவில் சராசரி மனிதன் 13 நிமிடங்கள், ஐரோப்பாவில் 10 நிமிடங்கள், ஜெர்மனியில் 7 நிமிடங்கள் வரை நீடிக்க முடியும் என்கிறது. ஆண்களால் எவ்வளவு காலம் நீடிக்க முடியும் என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

 
ஆபாச படங்களின் ரீல் வாழ்க்கை : ஆபாச படங்களில் ஆண் குறியின் நீளம் 20 செ.மீ. மற்றும் உடலுறவில் சராசரியாக 30 முதல் 60 நிமிடங்கள் வரை நீடிப்பது போல் காண்பிக்கப்படும். ஆனால் அது திரைப்படங்களில் மட்டுமே. கடைசி காட்சி முதலில் படமாக்கப்படலாம். இதனால் ஆபாச படங்களில் நடிக்கும் ஆண்கள் கவலைப்படாமல் விந்துவை வெளியேற்ற முடியும். படங்களை எடுக்கும் போது சில நாட்கள் வரை கூட படமாக்கலாம். வேண்டுமானால் எடிட்டிங் கூட செய்து கொள்வார்கள். மேலும், பெரும்பாலான ஆபாச நட்சத்திரங்கள் மருந்துகளை உட்கொள்கின்றனர். எனவே, இது ஒருபோதும் சரியான ஒப்பீடு அல்ல.
 
 
நிஜ வாழ்க்கை : மில்லியன் கணக்கான ஆண்கள் தங்களது நிஜ வாழ்க்கையில் உடலுறவு நேரத்தை நீட்டிக்க கடுமையாக முயற்சிக்கிறார்கள். சீக்கிரம் விந்து வெளியேறுவதற்கு ஆணுறுப்பின் நீளம், தன்மை ஆகியவை மட்டுமே காரணம் என்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
 
சராசரி விந்து வெளியேறும் நேரம் : சராசரியாக விந்து வெளியேறும் நேரம் அமெரிக்க ஆண்களுக்கு அதிகபட்சமாக 13 நிமிடங்கள், ஆனால் இந்திய ஆண்களுக்கு என்று வரும் போது அது குறைந்தபட்சம் 7 நிமிடங்களுக்கு குறைவாக மாறுகிறது. NHSLS கணக்கெடுப்பின்படி, 30-39 வயதுடைய 32 சதவீதம் ஆண்கள், 40-49 வயதுடைய 28 சதவீத ஆண்கள் மற்றும் 50-59 வயதுடைய 31 சதவீத ஆண்களுக்கு முன்கூட்டிய விந்து வெளியேறுவதாக கூறியுள்ளதாக தெரிவிக்கிறது.
 
ஆய்வு : பாலியல் சுகாதார மையத்தின் கூற்றுபடி, முன்கூட்டிய விந்து வெளியேறுவது என்பது நீங்கள் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக நீடித்தலை குறிக்கிறது. உறவின் போது அதிக நேரம் நீடிக்க வேண்டும் என்ற அழுத்தமும், விந்து விரைவில் வெளியேற காரணமாகிறது. மேலும் சிறு வயதிலேயே ஆபாச படம் பார்ப்பது கூட சீக்கிரமே விந்து வெளியேற கற்றுக்கொடுக்கிறது.
 
நீங்கள் மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும் : ஆண்களுக்கு சீக்கிரமாக விந்து வெளியேறும் பிரச்சனை இருந்தால் மருத்துவரை சந்திப்பது நல்லது. நீங்கள் மருத்துவரிடம் செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுதல், சுய இன்ப பழக்கத்தை கைவிடுவது, உங்கள் செயல்திறனைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது ஆகியவற்றை எல்லாம் முயற்சி செய்வது நல்லது. உடலுறவு என்பது மனதிற்குரியது, எனவே நீங்கள் அழுத்தமாக இருந்தால் உங்கள் எண்ணங்கள் உங்கள் செயல்திறனை நேரடியாக பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்