Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் காலை நேரத் தாம்பத்யம்!

திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும் காலை நேரத் தாம்பத்யம்!

31 ஆவணி 2022 புதன் 14:23 | பார்வைகள் : 14944


அதிகாலை பொழுதில், நமது வாழ்க்கைத் துணையின் தோள்களில் சாய்ந்து தூங்கி எழுவதை காட்டிலும் இனிமையான தருணம் எதுவுமில்லை. பார்ட்னரின் பக்கம் திரும்பி படுத்துக் கொண்டு, அப்படியே வருட தொடங்கி ஒன்றிரண்டு முத்தங்களை கொடுத்து, பின்னர் அது பாலியல் உறவில் முடியும்போது அது முழு திருப்தி மற்றும் மகிழ்ச்சியை தருகிறது. குறிப்பாக, காலையிலேயே மனதிற்கு பெரும் புத்துணர்ச்சி தரும் விசயமாக அமைகிறது.

 
பொதுவாக இரவு நேரத்தில் உள்ள உடல் சோர்வு, மன அழுத்தம் போன்றவை அதிகம் இருக்கும். ஆனால், காலை நேரத்தில் சோம்பல் முறித்து உடல் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்குவதுடன், அந்த சமயத்தில் பாலியல் உணர்வுகளும் மிக அதிகமாக இருக்கும்.
 
காலையில் தாம்பதித்ய உறவு வைத்துக் கொள்ளும்போது கிடைக்கும் உச்சகட்டம் என்பது நாள் முழுவதும் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
 
பந்தம் பலப்படும்
 
நீங்களும், உங்கள் பார்ட்னரும் அதிகாலைப் பொழுதில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதால் இருவருக்குமான பந்தம் பலப்படுகிறது. காலையில் உறவு கொள்ள நேரம் ஒதுக்குவதன் மூலமாக, பிஸியான நேரத்திற்கு மத்தியிலும் உங்கள் பார்ட்னருக்காக நேரம் ஒதுக்குகிறீர்கள் என்பது தெரியவரும்.
 
புத்துணர்ச்சி தரும்
 
காலையில் உறவு வைத்துக் கொள்வதன் மூலமாக உங்கள் உடலில் மகிழ்ச்சிக்குரிய ஹார்மோன்கள் அதிகம் தூண்டப்படும். நம் உடல் மற்றும் மனம் தூண்டப்படும்போது ஆக்ஸோடின் என்னும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது.
 
நல்லதொரு உடற்பயிற்சி
 
காலையில் உடற்பயிற்சி செய்வது உடல் நலனுக்கு நல்லது என்று தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், அந்த உடற்பயிற்சியுடன் இன்பமும் கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே!
 
கன்னம் பொலிவு பெறும்
 
அதிகாலைப் பொழுதில் பார்ட்னரிடம் இருந்து கிடைக்கும் முத்தங்கள் நமக்கு மகிழ்ச்சியை தருவதுடன், தசைப் பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால், நம் முகம் பொலிவு பெறுகிறது.
 
உடனடியாக ஸ்ட்ரெஸ் நீங்குகிறது
 
தாம்பத்யம்  என்பது மன அழுத்தத்தை போக்கி உடனடி புத்துணர்ச்சி தருகிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபனம் செய்யப்பட்டிருக்கிறது. உடலில் உள்ள சோர்வை நீக்கி இது புத்துணர்ச்சி தரும்.
 
காலை நேரத்தில் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம்
 
இந்த சமயத்தில் தாம்பத்ய  உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நேரம் ஒதுக்க வேண்டாம். அது தேவையற்ற மனச்சுமையை ஏற்படுத்திவிடும். வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் இதை அமைத்துக் கொள்வது மகிழ்ச்சி தரும்.
 
ஆகவே, உடலையும், மனதையும் எப்போதும் தாம்பத்ய உறவுக்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். காலை நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் மசாஜ் செய்து விடுவதன் மூலமாக உணர்வுகளை தூண்டி விடலாம். துரிதமான தாம்பத்திய உறவும் கூட காலை நேரத்தில் மகிழ்ச்சி தரும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்