Paristamil Navigation Paristamil advert login

ஜவான் பல படங்களின் காப்பியா.?

ஜவான் பல படங்களின் காப்பியா.?

8 புரட்டாசி 2023 வெள்ளி 03:08 | பார்வைகள் : 7825


ஜவான் முதல் காட்சி முடிந்ததுமே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பல கருத்துக்கள் வெளிவந்தது. ஆனா இப்ப அது அப்படியே உல்டாவா மாறி ஷாக் கொடுத்து இருக்கிறது. ஏனென்றால் ஜவான் படத்தில் பல தமிழ் படங்களின் சாயல் இருக்கிறது.

அதிலும் கடந்த அஞ்சு வருஷமா நாம் பார்த்து சலிச்சு போன விவசாய சம்பந்தப்பட்ட கதை இப்பதான் ஓரளவுக்கு தமிழ் சினிமாவில் ஓய்ந்து போய் இருக்கிறது. அதை அப்படியே ஹிந்தி பக்கம் கொண்டு போய் சங்கர், ஏ ஆர் முருகதாஸ் பட கதையையும் மிக்ஸ் செய்து ஜவான் படத்தை எடுத்திருக்கிறார் அட்லி.

அதில் அரசு துறையில் நடக்கும் ஊழல் அதை குறிப்பிட்ட சில மணி நேரங்களில் சரி செய்வது என போர் அடிக்கும் சமாச்சாரமும் இருக்கிறது. அந்த வகையில் ரமணா, சர்க்கார், அஜித்தின் ஆரம்பம் போன்ற பல படங்களின் வாடை வீசுகிறதாம்.

எப்படி என்றால் ஜவான் ஆயுத ஊழல் பற்றிய கதையாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று தான் ஆரம்பம் படமும் ராணுவ உடை ஊழல் பற்றிய கதையாக இருந்தது. அதைப்பற்றி கூறிவரும் ரசிகர்கள் மொத்தமாக எல்லா படங்களையும் காப்பி அடித்திருக்கிறார் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இதனால் பாவம் ஷாருக்கான் நிலைமை தான் பரிதாபகரமாக மாறி இருக்கிறது. கஷ்டப்பட்டு கோடி கணக்கில் பணத்தை போட்டு படம் எடுத்துவிட்டு இப்படி ஒரு சோதனையையும் அவர் பார்க்க வேண்டியிருக்கிறது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்