துப்பாக்கி தோட்டாக்களை தெறிவிக்கவிடும் கமல்ஹாசன்

8 புரட்டாசி 2023 வெள்ளி 02:55 | பார்வைகள் : 9723
நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‛இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதற்கு அடுத்து வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்க போகிறார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகின. தற்போது அமெரிக்காவில் கமல் முகாமிட்டுள்ளார். இந்த பயணத்தின்போதே தனது அடுத்த 233வது படத்திற்கான ஆயத்த பணிகளிலும் தீவிரமாகி உள்ளார். அதாவது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். பல்வேறு ரக மாடல் துப்பாக்கிகளில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் உள்ளார். தோட்டாக்கள் தெறிக்க தெறிக்க இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ உடன் ‛தைரியம் மற்றும் துப்பாக்கிகள்' என கேப்ஷன் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.. இந்த வயதிலும் கமல்ஹாசன் ஒரு படத்துக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வியப்பளிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025