Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கணவன் மனைவி இணைந்து இந்த விஷயங்களை செய்தால் உறவில் நெருக்கம் அதிகரிக்கும்

 கணவன் மனைவி இணைந்து இந்த விஷயங்களை  செய்தால் உறவில் நெருக்கம் அதிகரிக்கும்

31 மார்கழி 2022 சனி 11:40 | பார்வைகள் : 51061


 காதலர்களோ, திருமணமான தம்பதிகளோ, ஒரே மாதிரியான வாழ்க்கை முறை, பழக்க வழக்கம் எல்லாம் ஒரு கட்டத்தில் சலித்து விடும். அன்பும் காதலும் நீடிக்க, உறவில் பிணைப்பு அதிகரிக்க, சுவாரஸ்யமாகக, பல விஷயங்கள் உள்ளன.

 
ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிட என்னென்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது, திரைப்படங்கள், உலகில் எங்கெங்கோ வெளியாகும் வெப் சீரிஸ் ஆகியவை எல்லாம் ஒன்றாகப் பார்க்கலாம் என்று பெரும்பாலனாவர்களுக்கு தோன்றும். ஆனால், ஒரு கட்டத்தில் இதுவும் போரடிக்கும்! சரி, உறவில் ஒரு ஸ்பார்க் உண்டாக்க, வேறு என்ன செய்யலாம் என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
 
புதிதாக ஏதோ ஒன்று கற்றுக்கொள்ளும் போது, பலரும் புத்துணர்ச்சியாக உணர்வார்கள்! டான்ஸா, நானா என்று கேட்பவர்கள் கூட, பார்ட்னருடன் நடனம் ஆடுவதை முயற்சி செய்யலாம். இணையத்தில், சோஷியல் மீடியாவில் எவ்வளவோ டிரெண்டிங் நடன வீடியோக்கள் உள்ளன. அதைப் பார்த்து முயற்சி செய்யுங்கள். நடனம் கற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, நிச்சயமாக உங்கள் உறவில் நெருக்கம் அதிகரித்திருக்கும்.
 
தம்பதிகளாக, காதலர்களாக பைக் டிரைவ் செய்வது மிக மிக ரொமான்டிக்கான விஷயங்களில் ஒன்று. ஆண், பெண் என்று அனைவரும் பரவலாக விரும்புவார்கள். உங்கள் துணையுடன் ஒரு பைக் டிரைவ் செல்ல திட்டமிடலாம்.
 
சமையலறையில் துணையுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை பரவலாக பார்த்திருப்பீர்கள். மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ரொமாண்டிக் செயல்களில் கிச்சன் ரொமான்சும் ஒன்று. சமைக்கும் போது தொந்தரவாக மாறாத வகையில், சின்ன சின்ன உதவி செய்யலாம், காய்கறி வெட்டலாம், வெட்ட கற்றுத் தரலாம், துணைக்கு பிடித்த உணவை சமைத்து அசத்தலாம்!
 
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல, ஒன்றாக நேரம் செலவிட முடியும். அதே நேரத்தில், வீடும் சுத்தமாகும். மேலும், வீட்டுக்கு என்ன தேவை, தேவையில்லை என்பதைப் பற்றி இருவரும் உரையாட முடியும்.
 
எல்லா அலங்காரப் பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலவற்றை நீங்களே செய்யலாம். பெயிண்டிங், கலரிங் செய்தல், சுவற்றுக்கு வண்ணம் பூசுதல், கைவினை பொருட்கள் செய்தல் என்று என்ன செய்யலாம் என்று இருவரும் பேசி முடிவு செய்யலாம். அலங்கார பொருட்களை அழகாக செய்ய முடிந்தால், அது உங்களின் மறக்க முடியாத நாட்களின் நினைவாக காலம் தோறும் இருக்கும். இல்லையென்றாலும், நீங்கள் இருவரும் ஒன்றாக செலவழித்த நேரம் நெருக்கத்தை அதிகரிப்பதாக மாறும்.
 
டின்னர் என்றாலே பெரிய பெரிய நவீன உணவகங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. இட்லி, தோசை, முதல் பாணி பூரி, சாட் உணவுகள் வரை, தள்ளு வண்டிக் கடைகளில் சாப்பிடுங்கள். வித்தியாசமான, மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்!
 
பொழுதுபோக்கு என்பதை கொஞ்சம் மாற்றி, நாடகம், அருங்காட்சியகம், ஒரு ஸ்டாண்ட்அப் காமெடி நிகழ்ச்சி அல்லது பொருட்காட்சிக்கு செல்லுங்கள். அதே போல, லைவ்வான இசை நிகழ்ச்சி என்றால், அதை ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க முயற்சி செய்யுங்கள்.
 
ஒன்றாக இணைந்து நேரம் செலவழிப்பது என்பது பொழுதுபோக்க மட்டும் அல்ல, பயனுள்ளதாகவும் மாற்றலாம்! அதில், சேர்ந்து உடற்பயிற்சி செய்வதும் ஒன்று! ஒன்றாக உடற்பயிற்சி அல்லது யோகா செய்யும் போது, உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். இது நெருக்கத்தை பல மடங்கு அதிகரிக்கும்.
 
பிக்னிக் எல்லாம் பள்ளிகாலத்தில் நடந்து, அதை மறந்தே போயிருப்பீர்கள். வீட்டிலேயே இருப்பதற்கு, குட்டியாக ஒரு பிக்னிக் சென்று வாருங்கள்!
 
எந்த வயதாக ஆனால் என்ன, ஒரு சில விளையாட்டுக்கள் மீது எப்போதுமே ஆர்வமும் ஈர்ப்பும் இருக்கும். இருவரும், கேரம், செஸ், போர்டு கேம், லூடோ என்று பல விதமான கேம்கள் விளையாடலாம்.
 
இருவரில் ஒருவருக்கு வாசிப்பு பழக்கம் இருப்பவர்கள் என்றால், நேரம் எப்போதுமே சலிக்காது, அலுக்காது. இருவரும் புத்தகம் வாசித்தால், ஒன்றாக புத்தகங்களை வாசிக்கலாம். மிகவும் அழகான அனுபவமாக இருக்கும். ஒருவர் மட்டும் புத்தகம் படிப்பார் என்றால், மற்றவருக்கு பிடித்த வரிகளை, கவிதைகளை வாசித்துக் காட்டலாம்.
 
எல்லாருக்கும் ஆசைகள் இருக்கும். அதில சில விஷயங்களை செய்யமுடியாமல் போகும் சூழல் ஏற்படும். உங்கள் இருவருக்கும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஒரு பக்கெட் லிஸ்ட்டை உருவாக்கி, அதை ஒவ்வொன்றாக செய்யலாம்.
 
ஒரு சில மணி நேரங்கள், இருவரின் மொபைல் போனை ஆஃப் செய்துவிட்டு, உங்கள் நேரம் எப்படி செல்கிறது என்று பாருங்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்