மூன்றரை வயதுக் குழந்தை வாகனத்தில் மோதி மரணம் PAU நகரில்.
7 புரட்டாசி 2023 வியாழன் 09:07 | பார்வைகள் : 14688
PAU நகரில் உள்ள Marancy என்னும் பாடசாலையில் இவ்வாண்டு மழலையர் பிரிவில் சேர்க்கப்பட்ட Souhail என்னும் மூன்றரை வயதுக் குழந்தையே வாகனம் ஒன்றுடன் மோதி மரணம் அடைந்துள்ளது.
கடந்த புதன்கிழமை (06/09) தாயாருடன் பாடசாலையில் இருந்து வெளியேறிய Souhail தனியார் வாகனத் தரிப்பிடத்தில் தாயாரின் வாகனத்தில் ஏறுவதற்கு முற்பட்ட போது பின்னால் வந்த வாகனத்தின் சக்கரத்துக்குள் அகப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் குழந்தை மரணமடைந்ததாக தெயவருகிறது.
இதனையடுத்து குறித்த வாகனத்தை ஓட்டிவந்த பெண்மணியை விசாரணைக்காக கைதுசெய்து தடுத்து வைத்துள்ள காவல்துறையினர், குழந்தையை மோதிய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
தாயாரின் கவனயீனமா, அல்லது பின்னால் வாகனத்தை ஓட்டிவந்த பெண்மணியின் தவறா என்னும் கோணத்தில் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan