விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி தோல்வி!
4 மாசி 2017 சனி 13:54 | பார்வைகள் : 13163
விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு அனுப்பபட்ட கோனோடோரி விண்கலம் சரியாக இயங்காததால் திட்டம் தோல்வி அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு கோனோடோரி எனப்படும் சரக்கு விண்கலம் ஒன்றை சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஜப்பான், கடந்த டிசம்பர் மாதம் அனுப்பியது.
விண்ணில் பழுதடையும் செயற்கை கோள்களின் பொருட்கள், வெடித்துச் சிதறும் பொருட்கள் என கிட்டத்தட்ட 10 கோடி டன் எடையுள்ள தேவையற்ற குப்பைகள் விண்வெளியில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனை நீக்கவே இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
இதற்காக, 10 ஆண்டு கால ஆராய்ச்சியில், ஜப்பானின் மீன்பிடி வலை நிறுவனம், நவீன உலோக வலையை தயாரித்து கொடுத்துள்ளது. இந்த வலை மிக மெல்லிய, அதே நேரத்தில் மிக சக்திவாய்ந்தது. இவை 700 அடி அகலத்துக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதான் விண்வெளியில் சுற்றி வரும் எலக்ட்ரானிக் குப்பைகளை பிடித்து, பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு கீழே இறக்கிவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போது அந்த கோனோடோரி சரியாக இயங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குப்பைகளை அகற்றும் பணியில் தோய்வி ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்சியாளர்களின் கருத்துப்படி, இந்த கோனோடோரி விண்கலம் வரும் சனிக்கிழமை பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan