Paristamil Navigation Paristamil advert login

நிலவுக்கு மட்டும் அல்ல சூரியனுக்கே செல்ல திட்டமிடும் நாசா!

நிலவுக்கு மட்டும் அல்ல சூரியனுக்கே செல்ல திட்டமிடும் நாசா!

28 மாசி 2017 செவ்வாய் 13:49 | பார்வைகள் : 14465


 சந்திரன், செவ்வாய் என விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் பல அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சூரியனுக்கு விண்கலம் அனுப்பு யாரும் முன்வரவில்லை.

 
இந்நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
 
பூமியில் இருந்து 14 கோடியே 90 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது சூரியன். இது மற்ற கிரகங்களை விட கடுமையான வெப்பம் கொண்டது. 
 
எனவே அதற்கு ஏற்றவாறு விசே‌ஷ விண்கலம் தயாரித்து அனுப்ப உள்ளது நாசா. இதற்கான தீவிர முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இது நாசா விஞ்ஞானிகளின் முதல் முயற்சி ஆகும். அடுத்த ஆண்டு 2018-ல் சூரியனுக்கு விண்கலன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்