ஏலியன்களின் சமிக்ஞையை கண்டறிய புதிய நடவடிக்கை!

21 தை 2018 ஞாயிறு 11:41 | பார்வைகள் : 12521
உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகின்ற விடயமாக ஏலியன்கள் மாறிவிட்டன.
எனினும் ஏலியன்கள் இருப்பதற்கான சாத்தியத்தினை இதுவரை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இருந்தும் இது தொடர்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
இவற்றின் அடிப்படையில் ஏலியன்களை கண்டறிவதற்கும், புவியீர்ப்பு அலைகளை கண்டறிவதற்கும், ஏனைய அண்டவெளி அதிசயங்களை கண்டறியவும் என சீனா புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
அதாவது மற்றுமொரு இராட்சத ரேடியோ தொலைகாட்டியினை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இத் தொலைகாட்டியானது ஏலியன்கள் உட்பட ஏனைய விண்பொருட்களின் சமிக்ஞைகளை உணரக்கூடியதாக இருக்கும்.
இதனை உருவாக்குவதற்கான அனுமதி இவ் வாரம் வழங்கப்பட்டுள்ளது.
Qitai 110m Radio Telescope (QTT) என அழைக்கப்படும் இத் தொலைகாட்டியானது வானத்தின் 75 சதவீதத்தினை உள்ளடக்கி ஆய்வு செய்யக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.