Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் நிர்மாணிக்கப்படும் ஒரு சொகுசு ஹோட்டல்!

விண்வெளியில் நிர்மாணிக்கப்படும் ஒரு சொகுசு ஹோட்டல்!

6 சித்திரை 2018 வெள்ளி 14:38 | பார்வைகள் : 14903


அமெரிக்க நிறுவனம் ஒன்று விண்வெளியில் சொகுசு ஓட்டல் ஒன்றை அமைக்க உள்ள நிலையில் அந்த ஓட்டலில் தங்குவதற்கான கட்டணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
அமெரிக்காவின் ஓரியோன் ஸ்பேன் எனும் நிறுவனம், 2021ஆம் ஆண்டு விண்வெளி ஓட்டல் ஒன்றை திறக்க உள்ளது. இந்த ஓட்டலில் தங்குவதற்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
 
மக்களுக்கு விளம்பரங்கள் மூலம் ஏற்கனவே இந்த ஓட்டல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஓட்டலில் தங்க முன்பதிவுத் தொகையாக 51 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
 
மேலும் இங்கு ஆறு பேர், 12 நாட்களுக்கு தங்குவதற்கு சுமார் 61 கோடி ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது. இந்த தகவலை, கலிபோர்னியாவில் உள்ள சான்ஜோஸில் ‘Space 2.0' மாநாட்டில் ஓரியோன் ஸ்பேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்