அனிருத்தின் சம்பளம் இத்தனை கோடியா?

அனிருத்தின் சம்பளம்  இத்தனை கோடியா?

1 புரட்டாசி 2026 செவ்வாய் 17:02 | பார்வைகள் : 140


தமிழ் திரையுலகில் தனுஷின் '3 திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது துள்ளலான இசையால் உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்தவர் அனிருத் ரவிச்சந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் என தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு அடுத்தடுத்து ஆஸ்தான இசையமைப்பாளராக மாறி, தொடர் பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்து வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவைத் தாண்டி பாலிவுட் ('ஜவான்') மற்றும் டோலிவுட் ('தேவரா') வரை பான்-இந்தியா அளவில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள அனிருத்தின் சம்பளம் குறித்த தகவல் ஒன்று திரையுலக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அட்லி இயக்கத்தில் ராக்கா  படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய பான்-இந்தியா ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்திற்காக அனிருத்துக்கு சுமார் ரூ. 23 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு  ஜவான் ,  லியோ ,  ஜெயிலர்  போன்ற மெகா பட்ஜெட் படங்களுக்கு ரூ. 8 முதல் ரூ. 15 கோடி வரை பெற்று வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது மார்க்கெட் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களான தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் எஸ்.எஸ். தமன் ஆகியோர் ரூ. 8 முதல் ரூ. 10 கோடி வரை பெற்று வரும் சூழலில், அனிருத்தின் இந்த 23 கோடி சம்பள ஒப்பந்தம் இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படிக்க