இண்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிவர்த்தனை: போன்பே

இண்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிவர்த்தனை: போன்பே

1 புரட்டாசி 2026 செவ்வாய் 12:07 | பார்வைகள் : 121


இணையதள வசதி இல்லாமலேயே பணம் பரிவர்த்தனை செய்யும் புதிய வசதியை போன்பே அறிமுகப்படுத்துகிறது.

நவீன உலகில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. நாளுக்கு நாள் அதன் பயன்பாடும், தாக்கமும் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னணியில் உள்ள போன்பே செயலி, விரைவில் 'போன்பே 123பே' (123Pay) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பையும் போன்பே வெளியிட்டுள்ளது.

குறைந்த அளவிலான 2ஜி இணைப்பு வசதி உள்ள பகுதிகளிலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில், நோக்கியா, ஹெச்எம்டி, லாவா உள்ளிட்ட பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் போன்பே ஒப்பந்தம் செய்துள்ளது.

முதன்முறையாக நுகர்வோர் இந்த சேவையை எளிதாக பயன்படுத்தும் வகையில், 12 மொழிகளில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.

கேமரா பொருத்தப்பட்டுள்ள செல்போன்கள் மூலம் க்யூஆர் கோடு குறியீடுகளை ஸ்கேன் செய்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவும் முடியும்.
 

தொடர்ந்து படிக்க