வடகொரியாவில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர்

வடகொரியாவில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சர்

1 புரட்டாசி 2026 செவ்வாய் 10:36 | பார்வைகள் : 105


வடகொரியாவில் அதன் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில்  ஆட்சி நடந்து வருகிறது.

அந்த நாட்டின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றான பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்த அவர் முன்னணி ராணுவ அதிகாரியும் அரசியல் தலைவராக செயல்பட்டுவந்தார்.

வடகொரியாவின் அதிநவீன ஏவுகணைகள், அணு ஆயுத திட்டங்கள் மற்றும் புதிய போர் ஆயுத அமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி பல லட்சம் வீரர்கள் கொண்ட மக்கள் ராணுவத்தை நிர்வகித்து வந்தார்.

வடகொரியாவில் ராணுவ தலைமையை மாற்றியமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நோ குவாங் சோல், பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், பாதுகாப்பு மந்திரியாக இருந்த நோ குவாங் சோல், பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வெடிமருந்து தொழில் துறையின் முதலாவது துணை இயக்குனராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டு போர்ப்பயிற்சி அவருக்கு பதிலாக, கொரிய மக்கள் ராணுவத்தின் பொது அரசியல் பிரி வின் இயக்குனரான கிம் சோங் கி புதிய பாதுகாப்பு அமைச்சரக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்பு ஆலோசகரான பாக் ஜோங் சோன், மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவராகவும், அரசியல் பிரிவு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.  

தொடர்ந்து படிக்க