இந்தியாவில் மோசடிகளை தடுக்க Amazon புதிய பிரிவு அறிமுகம்
30 ஆவணி 2026 ஞாயிறு 15:50 | பார்வைகள் : 140
இந்தியாவில் மோசடிகளை தடுக்க Amazon புதிய பிரிவை அறிமுகப்படுத்துகிறது.
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ள நிலையில், போலியான பொருட்கள் மற்றும் மோசடிகள் பெரும் சவாலாக மாறியுள்ளன.
இதை சமாளிக்க Amazon நிறுவனம் Counterfeit Crimes Unit (CCU) எனும் சிறப்பு பிரிவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பிரிவு, Amazon தளத்தில் போலியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து, அவர்களின் சப்ளைச் செயினை முறியடிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
CCU குழுவில் வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள், தரவு விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் உள்ளனர்.
Amazon CCU உலகளவில் 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில், 32,000க்கும் மேற்பட்ட மோசடி வியாபாரிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
15 மில்லியனுக்கும் மேற்பட்ட போலியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. மேலும், 300 மில்லியன் டொலர் மதிப்பிலான அபராதம் விதிக்கப்பட்டு, 290-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் CCU ஏப்ரல் 2026 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது, Amazon இந்தியா, CBI மற்றும் மாநில பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை நடத்தி வருகிறது.
“Mission Grahak” மற்றும் “ScamSmartIndia” போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்படுகின்றன.
Amazon, விற்பனையாளர்களை தளத்தில் சேர்க்கும் முன்பே AI அடிப்படையிலான ஆவணச் சரிபார்ப்பு, வீடியோ அடையாளச் சோதனை போன்ற முறைகளை கடுமையாகப் பின்பற்றுகிறது.
இதனால், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக வாங்கும் சூழல் உருவாகும் என நிறுவனம் நம்புகிறது.



